அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

பெரம்பலூர் ஆட்சியரக கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

எரிவாயு உருளைகள் மறுநிரப்பி வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனபோக்கு தொடர்பாக புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி, ஜூலை 27 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே எரிவாயு நுகர்வோர், எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருந்தால் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-