அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னையில் இருந்து. ஜித்தா  புறப்பட்ட சவுதி விமானத்தில் தொழிநுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த விமானத்தில் இருந்த 258 பயணிகள் உயிர்த்தப்பினர்.

சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று -19 முற்பகல் 11.40 மணியளவில் 258 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஜித்தா நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில் சிறிது நேரத்திலே இந்த விமானத்தில் தொழிநுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 258 பயணிகள் உயிர்த்தப்பினர்.

இந்த விமானத்தின் கோளாறுகளை சரி செய்யும் பணி நடந்து வரும் நிலையில், கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-