
சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் தவறவிட்ட 25 பவுன் நகையை எடுத்துக்கொடுத்த பெண்ணை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் வெகுமதி அளித்தார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் மைமூன்ராணி (40) இவர் தண்டையார் பேட்டையில் உள்ள உறவினர் அன்வர்கான் வீட்டுக்கு வந்திருந்தார். உறவினர்களிடம் மைமூன்ராணி மெரினா கடற்கரைக்கு சென்றார். பின்னர் அனைவரும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது மைமூன்ராணி எடுத்து சென்ற நகை பை மாயமாகி இருந்தது. அதில் 25 பவுன் நகை ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம் செல்போன் ஆகியவை இருந்தது. அதனை மெரினா கடற்கரையிலே தவறவிட்டது தெரியவந்தது. இதுபற்றி இரவு 12.30 மணியளவில் மைமூன்ராணி அண்ணாசதுக்கம் போலீசில் புகார் செய்தார். திருவல்லிகேணி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மைமூன்ராணியின் தொலைந்து போன செல்போனை தொடர்பு கொண்டனர் ஆனால் போன் எடுக்கப்பட வில்லை. இந்தநிலையில் காலையில் திருவல்லிகேணி லாக் நகரைசேர்ந்த அமுதா என்ற பெண் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து மைமூன்ராணியின் தொலைந்து போன நகைபையை பத்திரமாக ஒப்படைத்தார். இவர் மெரினா கடற்கரையில் டீ கடை வைத்துள்ளார். அதனை போலீசார் வாங்கி பார்த்தனர் அதில் தொலைந்து போன நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருந்தது. இதையடுத்து மைமூன்ராணியை போலீசார் நேரில் வரவழைத்தனர்.
மீட்கப்பட்ட நகை மற்றும் பணத்தை இணைக்கமிஷனர் மனோகரன் மைமூன்ராணியிடம் வழங்கினார்.
இன்று அமுதாவை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் வெகுமதி அளித்தார். அவரது நேர்மையையும் பாராட்டினார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.