அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மும்பை: கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதை பொதுமக்கள் மாற்றிக்கொள்ள ஜூன் 30ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில்தான் இந்த நோட்டை மாற்ற முடியும் எனவும், பெரும்பாலான நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2005க்கு முந்தைய நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-