அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







சென்னை : தமிழகத்தில் 2016ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நாளை முதல் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 35,53,353 மாணவர்களுக்கு பதிவுகள் செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 2016ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்பட உள்ளது. அதனால் நாளை முதல் வருகிற 1ம் தேதி வரை 15 நாட்களுக்கு படித்த பள்ளியிலேயே பதிவு செய்து வழங்குவதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று வர வேண்டும். மேலும், மெட்ரிக் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பயின்ற மாணவர்களும் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் (http://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்யலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-    



தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
****************************************************************
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில்

வைத்திருத்தல் வேண்டும். முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை

கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில்

முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே

கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact

detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

கவணிக்க 1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.

கவணிக்க 2: மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

கவணிக்க 3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

கவணிப்பு 4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான விவரம்: உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)

பதிவு செய்த ஆண்டு: 2010

ஆண் / பெண் : M/F

பதிவு எண்: 7802

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.



User ID: ARD2012M00007502

Password: dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.

உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.

வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்ணும், மாவட்ட விவரமும்:
******************************************************************************************
1. ARD - District Employment Office-Ariyalur

2. CBD - District Employment Office-Coimbatore

3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore

4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore

5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai

6. CHP - Professional and Executive Employment Office-Chennai

7. CHR - Regional Deputy Director Office-Chennai

8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai

9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai

10. CHU - District Employment Office (Unskilled)-Chennai

11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore

12. CUD - District Employment Office-Cuddalore

13. DGD - District Employment Office-Dindigul

14. DRD - District Employment Office-Dharmapuri

15. ERD - District Employment Office-Erode

16. KGD - District Employment Office-Krishnagiri

17. KPD - District Employment Office-Kancheepuram

18. KRD - District Employment Office-Karur

19. MDD - District Employment Office-Madurai

20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai

21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai

22. NGD - District Employment Office-Kanyakumari

23. NKD - District Employment Office-Namakkal

24. NPD - District Employment Office-Nagapattinam

25. PDD - District Employment Office-Pudukottai

26. PRD - District Employment Office -Perambalur

27. RPD - District Employment Office-Ramanathapuram

28. SGD - District Employment Office-Sivaganga

29. SLD - District Employment Office-Salem

30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy

31. TCD - District Employment Office-Trichy

32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy

33. THD - District Employment Office-Theni

34. TJD - District Employment Office-Thanjavur

35. TMD - District Employment Office-Thiruvannamalai

36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli

37. TND - District Employment Office-Thirunelveli

38. TPD - District Employment Office-Tiruppur

39. TRD - District Employment Office-Thiruvarur

40. TTD - District Employment Office-Tuticorin

41. TVD - District Employment Office-Thiruvallur

42. UGD - District Employment Office-Nilgiris

43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris

44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore

45. VLD - District Employment Office-Vellore

46. VPD - District Employment Office-Villupuram

47. VRD - District Employment Office-Virudhunagar 


நன்றி தினமணி நாளிதழ் - 13.07.2013

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-