அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... கோப்பு படம்


பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 2015–16 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், 75 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கவுரவித்தல் விழாவும் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் அங்கமுத்து தலைமை தாங்கினார். விருதுபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மருதமுத்து கூட்ட அறிக்கையும், பொருளாளர் ஆதிசிவம் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் இல.வெங்கடாஜலபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ–மாணவிகள் 29 பேருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் 75 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சிலுப்பன், ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜமோகன், துணைத்தலைவர்கள் கிருஷணமூர்த்தி, சிவலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை நிலைய செயலாளர் மணி, செய்தி தொடர்பாளர் தேவகுமாரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முடிவில் குன்னம் வட்ட தலைவர் செங்கான் நன்றி கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-