அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நைஜீரிய நாட்டை சேர்ந்த 19 வயது பெண் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் லஹதின் மகோலே என்ற கிராமத்தில் வசித்து வரும் ரஹ்மா கருணா என்பவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போது, அவரது கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சியடைவது பாதிக்கப்பட்டது.தற்போது, 19 வயதாகிவிட்ட ரஹ்மாவால் தனியாக எங்கும் செல்ல இயலாது, இதனால் தனது மகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க கூடாது என எண்ணிய் தாய், பிளாஸ்டிக் கிண்ணத்தில் தனது மகளை வைத்து, அவள் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.

இதுகுறித்து ரஹ்மா- வின் தாயார் கூறியதாவது, ரஹ்மாவுக்கு 6 வயது இருக்கையில் அவளுக்கு திடீரென காய்ச்சல் வந்தது, அதன் பின்னர் அவளது உடல் உறுப்பு பாகங்கள் வளர்ச்சியடைவில்லை, போதிய பண வசதி இல்லாத காரணத்தால் மேற்கொண்டு சிகிச்சை செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்.ரஹ்மா- வின் இளைய சகோதரன் பகத் கூறியதாவது, நான் எப்போதும் எனது சகோதரிக்கு உதவிசெய்வேன், அவரை பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைத்து உறவினர்களின் வீட்டிற்கும், வெளியிலும் அழைத்து செல்வது என பல்வேறு வழிகளில் அவருக்கு உதவி செய்வேன் என கூறியுள்ளான்.

உறவினர்களை பார்த்து பேசி மகிழ்வதில் சந்தோஷம் கொள்ளும் நான், மளிகை கடை வைத்து எனது வாழ்க்கையை தொடர வேண்டும் என்பது எனது ஆசை என ரஹ்மா கூறியுள்ளார்.

Education
Health
Islam
Women
World muslims

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-