அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூரில் ரூ.17 லட்சம் செலவில் சிறுவர் பூங்காவை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.சிறுவர் பூங்கா

பெரம்பலூர் நகரில் குழந்தைகள் பொழுதுபோக்கிற்கும், பெரியவர்கள் தங்களது நேரத்தை செலவிடவும் மனமகிழ் மன்றமோ அல்லது இதர பொழுது போக்கு அம்சங்களோ இல்லாததால், 4.2.2010 பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அப்போதைய கலெக்டர் விஜயகுமார் முயற்சியால் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த சிறுவர் பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து விளையாட செய்து மீண்டும் அழைத்து செல்கிறார்கள். தினமும் மாலை நேரம், வார இறுதி நாட்கள் விடுமுறை நாட்களில் இந்த பூங்காவிற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் வேண்டுகோள்

இந்த பூங்காவை சரிவர பராமரிக்காததால் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன. சறுக்கு உபகரணத்தில் குழந்தைகள் கீழ்நோக்கி வரும் இடத்தில் போதிய மணல் நிரப்பப்படாமல் இருந்தது. சிறுவர்கள் உட்கார்ந்து சுற்றி விளையாடும் உபகரணங்கள், ஊஞ்சல் உள்ளிட்டவை உடைந்தும், பழுதடைந்தும் காணப்பட்டன. இதுபோன்ற குறைகளை சரிசெய்வதுடன் பூங்காவில் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ரூ12 லட்சம் ஒதுக்கீடு

இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவின் பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வாயிலாக ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்காவை புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி, பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள புதிதாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் விளையாட்டு உபகரணங்களுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு, பழுதடைந்த உபகரணங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழக அரசின் அறிவியல் மேம்பாட்டு கழகம், எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதி பங்களிப்புடன் இந்த பூங்காவை விளையாட்டு மூலம் அறிவியல் கற்கும் அறிவியல் பூங்காவாக மாற்றி அமைப்பதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக அறிவியல் விளையாட்டு உபகரணங்கள் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-