அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய்:

    துபாயில் புனித ரமலான் மாதத்தையொட்டி துபாயில் 1500 தொழிலாளர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் ராம் குடும்பத்தினர் தலைமையிலான குழுவினர் இப்தார் உணவு வழங்கினர். மனித நேயமும், நல்லிணக்கமும் சீராக இருக்க இவர்களை போன்ற பலர் செய்யும் அறசெயல்கள்தான். புனித ரமலான் மாதத்தில் துபாய் தமிழ் 89.4 எப் எம் மற்றும் மீனாட்சி செட்டிநாடு உணவகம் இணைந்து நடத்திய இதில் பங்கேற்றனர்.
    துபாய் அல்கூஸ்  மீனாட்சி செட்டிநாடு உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனங்களின் தலைமை செயல் இயக்குநர் சோனா ராம் மற்றும் குடும்பத்தினர் தலைமையில் ஆர் ஜேக்கள் நாகா, ராம் விக்டர்,சாரா ,பிராவோ,பிராகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மீனாட்சி செட்டிநாடு உணவகத்தின் மேலாளர் திரு .மகேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஊடக தொடர்புகளை நிர்மல் என்ற நிம்மி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-