அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கோவில்பட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ள மாணவர் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறவுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிவசூர்யா என்ற மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். விவசாயத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் விவசாயிகளுக்கு உதவும் புதுமையான படைப்பை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக நீண்ட நாட்கள் போராடி சூரிய ஒளியால் இயங்கக்கூடிய டிராக்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டர் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.


இந்த டிராக்டரை ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அப்துல்கலாம் பவுன்டேசன், மற்றும் ரஷ்யன் கலை மற்றும் அறிவியல் அமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிக்கான போட்டியில் இடம்பெற்றது. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்து 500 படைப்புகள் இடம்பெற்றன . இதில் மாணவர் சிவசூரியாவின் கண்டுபிடிப்பான டிராக்டர் முதலிடம் பெற்றது. இதில் அவருக்கு இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது.இளம் விஞ்ஞானி விருது பெற்ற சிவசூர்யாவிற்கு ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
,

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-