அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


அலகாபாத்,

கூகுள் நிறுவனத்தின் இணையதள தேடுதல் பொறியில் பிரதமர் மோடியின் புகைப்படம் உலகின் மிகப் பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதிலிருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றக் கோரியும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுசில்குமார் என்பவர் கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு அந்த நிறுவனம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் அலகாபாத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி ஆனதை தொடர்ந்து சுசில்குமார் அலகாபாத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை அணுகினார். இதையடுத்து அவருடைய மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு அலகாபாத் கூடுதல் மாவட்ட நீதிபதி மஹ்தாப் அகமது முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் புகார் தொடர்பாக கூகுள் நிறுவனத் தலைவர், அதன் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர், குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் மோடியின் படம் இடம் பெற்றது குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 31–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-