அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வேலூர் : தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு உருது மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்ட குளறுபடியால் அந்த சான்றிதழ்கள் தேர்வுத்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் நேற்று அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே தலைமையாசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ேவலூரில் உருதை முதன்மை மொழியை முதல் பாடமாக கொண்டு 2,987 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற அந்தந்த பள்ளிகளுக்கு சென்றனர். ஆனால் இவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கவில்லை.

அவர்களுக்காக வந்த மதிப்பெண் சான்றிதழ்களில், உருது மொழிப்பாடத்துக்கு பதில் தமிழ் என்று அச்சிடப்பட்டு மதிப்பெண் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் 2,978 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் தேர்வுத்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `. தமிழகம் முழுவதும் தேர்வு எழுதிய உருது மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. தற்போது தவறாக அச்சிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு, குறைகள் சரி செய்யப்பட்ட பின்னர் வழங்கப்படும்’’ என்றனர்.- See more at: http://m.dinakaran.com/detail.asp?Nid=232070#sthash.tuyXzusz.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-