அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஆன்லைன் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு நிர்மா சோப் அனுப்பிய பிளிப்கார்ட் நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆனந்த் பலாகியா (Anand Bhalakia) என்பவர், கடந்த மே மாதம் 25ம் தேதி சாம்சங் கேலக்சி நோட் 4 என்னும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்காக பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்டில் ஆர்டர் கொடுத்துள்ளார்.
மே 30ம் தேதி அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திடமிருந்து பார்சல் வந்துள்ளது, டெலிவரி கொடுக்க வந்தவரிடமிருந்து, பார்சலை பெற்றுக்கொண்டு மொபைல் போனின் விலை 29,900 ருபாய் பணத்தை செலுத்தியுள்ளார் ஆனந்த்.
புதிய மொபைலை பார்க்க ஆவலுடன் பார்சலை பிரித்த ஆனந்த், மொபைல் போனுக்கு பதிலாக நிர்மா சோப்பும், ஒரு மொபைல் சார்ஜரும் இருந்ததைக் கண்டு மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இதுகுறித்து டெலிவரி கொடுக்க வந்தவரை உடனே தொடர்பு கொண்டார், அதற்கு பிளிப்கார்ட் நிறுவன வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார் ஆனந்த், இதனை வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் தெரிவித்த போது, உங்களுடைய புகார் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என அதிகாரி பதில் கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து மலபார் ஹில் காவல்நிலையத்தில் ஆனந்த் புகார் அளித்ததையடுத்து, பிளிப்கார்ட் நிறுவனம் மீது 420 பிரிவின் ( மோசடி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் பரவி வரும் தற்போதைய சூழலில் மொபைலுக்கு பதிலாக நிர்மா சோப்பை டெலிவரி செய்துள்ள சம்பவத்தால் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோர் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-