அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அயல்நாட்டில் வேலை கிடைத்திவிட்டதா? விசா கிடைத்த உடன், வெளிநாட்டு பயனத்திற்கு தயராகும் உங்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விமானம் ஏறும் முன், உங்கள் வங்கி கணக்குகளை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும், இல்லையெனில் இந்திய வங்கி கிளைகளில் இருக்கும் கணக்குகளுக்கும் அயல்நாட்டு வங்கியின் கணக்கிற்கும் உள்ள தொடர்பில் பல பிரச்சனைகள் கொண்டு வரும்.இதனால் நம் தலை தான் உருளும்.

இதனை தவிர்க்கவும், சிக்கல்களை எளிதாக தீர்க்கவும், கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

1

181 நாட்கள்


முதன் முறையாக அயல்நாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு "நியமனம் ஆணையில் 181 நாட்களுக்கு அதிகமாக வேலை செய்பவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருக்கும்". இதனால் 181 நாட்களுக்கு பிறகு அவர் என்ஆர்ஐ என்னும் அங்கீகாரத்தை அடைவர், எனவே பயனத்திற்கு முன்பே என்ஆர்ஐ கணக்கை தொடங்கலாம்.

2

என்ஆர்ஐ கணக்கு


என்ஆர்ஐ கணக்குகளை துவங்க, பயணம் செய்யும் நாடுகளையும், நாட்களை பொருத்து வங்கிகளே உங்களை என்ஆர்ஐ கணக்குகளை துவங்குவதற்காக உங்களை அனுகலாம், இல்லையென்றால் உங்கள் சம்பள கணக்கு இருக்கும் வங்கியில் நீங்கள் இணைய மூலமாகவோ அல்லது நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.

சரி, புது கணக்கு துவங்கியாச்சு.. ஏற்கனவே இந்தியாவில் உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், வைப்பு நிதி மற்றும் முதலீடுகளின் நிலை என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

3

உங்கள் பெயரில் உள்ள கணக்குகள்


உங்கள் பெயரில் இருக்கும் அனைத்து கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் கணக்கின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு, ஆனால் வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.

4

கூட்டுக் கணக்கு


கூட்டுக் கணக்கில் இருக்கும் இரண்டாம் நபரின் கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாவிட்டாலும், வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.

5

கூட்டுக் கணக்கில் நிங்கள் இரண்டாம் நபராக இருந்தால்?


இத்தகைய நிலையில் நிங்கள் என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு, இந்த கணக்கை வித்தியாசமான முறையில் கையாளப்படும். அதாவது இந்த கணக்கை முதல் நபர் உயிருடன் இருக்கும் வரை இரண்டாம் நபரால் உபயோகப்படுத்த முடியாது.

6/9

வங்கி வைப்பு நிதிகள்


என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு அனைத்து வைப்பு நிதிகளும் என்ஆர்ஒ வைப்பு நிதிகளாக மாற்றப்படும். இதனால் நிதியின் வட்டி விகிதம், முதிர்வு அடையும் காலம் என எதிலும் மாற்றம் இருக்காது. ஆனால் வருமான வரி மட்டும் 30.9 சதவிதமாக கணக்கிடப்படும்.

7/9

பிபிஎஃப் கணக்குகள்


2003ஆம் ஆண்டுக்கு முன் இந்த கணக்குகளில் முதலீடு செய்ய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் 25.7.2003 அன்று வந்த சட்ட திருத்தத்தின் படி, பிபிஎஃப் கணக்கு முதிர்வு அடையும் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்த கணக்குகள் என்ஆர்ஐ தகுதி அடையும் முன் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்குகளில் முதலீடு செய்ய என்ஆர்இ அல்லது என்ஆர்ஒ கணக்குகளை பயன்படுத்த வேண்டும்.

8/9

டீமாட் மற்றும் பங்குகள் உரிமைகள்


என்ஆர்ஐ பங்கு சந்தையில் முதலீடு செய்ய பிஐஎஸ் (Portfolio Investment Services) கணக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்ஆர்ஐ தகுதி அடையும் முன் வாங்கிய பங்குகளை பிஐஎஸ் கணக்கிற்கு மாற்றி கொண்ட பின் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

9/9

கூட்டு என்ஆர்இ கணக்குகளை தொடங்கவும்


பயனத்திற்கு முன்பு, இந்தியாவில் என்ஆர்இ கணக்குகளை தொடங்கி அதில் கூட்டு நபரை சேர்க்கவும். இதனால் உங்கள் வருமானத்தைக் கொண்டு இந்தியாவில் உள்ள முதலீட்டை அவர் பராமரித்துக் கொள்வர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-