அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...*தமிழ்நாடு முழுதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI), எலெக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வயர்மேன், பிளம்பர்,  சிவில் டிராப்ட்ஸ்மேன், சர்வேயர், மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேன், எலெக்ரோ பிளேட்டிங் போன்ற 45 வகையான பொறியியல் தொழிற்பிரிவுகளிலும், கம்ப்யூட்டர்  ஆபரேட்டர், டைலரிங், காஸ்ட்யூம் டிசைனர், புக் பைண்டிங், லெதர் மேக்கர் போன்ற 20 வகையான பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள்  அளிக்கப்பட்டுவருகின்றன. அப்பயிற்சிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

*தமிழ்நாட்டில், மகளிர் தொழிற்பயிற்சி  நிலையங்கள் 12, ஆதிதிராவிட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் 1, பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் 6, பொதுத் தொழிற்பயிற்சி  நிலையங்கள் 58 என 77 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களும், 658 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன.

*இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் அகில இந்திய அளவிலான பாடத்திட்டங்களைக் கொண்ட தொழிற்பிரிவுகள், மாநிலப் பாடத்திடங்களைக் கொண்ட  தொழிற்பிரிவுகள் என்று இரு வகையான தொழிற்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான தொழிற்பிரிவுகளில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சில தொழிற்பிரிவுகளுக்கு 8 ஆம் வகுப்புத் தேர்ச்சியும், ஒருசில பிரிவுகளுக்கு 12 ஆம் வகுப்புத் தேர்ச்சியும் கல்வித்தகுதியாக இருக்கின்றன.

*ஒவ்வொரு  பிரிவுக்குமான கல்வித் தகுதியினை http://www.skilltraining.tn.gov.in/itia2016/ எனும் இணையதளத்திலிருக்கும் விளக்கக் கையேட்டைப் பார்த்துத்  தெரிந்துகொள்ளலாம். இப்பயிற்சிகளுக்கு 14 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும். http://www.skilltraining.tn.gov.in/itia2016/ என்ற  இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்ற விருப்பத்தை விண்ணப்பத்தில்  தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பம், அந்த மாவட்டத்திற்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்.

*கலந்தாய்வின்போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 20.6.2016. கலந்தாய்வுக்கான தேதி பின்னர்  அறிவிக்கப்படும். அந்தந்த மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கும் தொழிற்பிரிவு இடங்களுக்கும்,  தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு செய்யப்பட்ட இடங்களுக்கும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர்  சேர்க்கை நடைபெறும்.

*பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400 உதவித்தொகையாக வழங்கப்படும். இவை தவிர, அரசு வழங்கும் பேருந்துக்  கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடை, காலணி போன்றவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை அறிய மேற்காணும் இணைய தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அலுவலகத்திற்கு  நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

நன்றி:- உ.தாமரைச்செல்வி -தினகரன் கல்வி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-