அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2016 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ப. மஞ்சுளாதேவி.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டு (ஆகஸ்ட் 2016) பல்வேறு தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வயது வரம்பு: 14 வயது முதல் 40 வயது வரை. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், மின்சார பணியாளர், புட் புரொடக்ஷன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்றவைப்பவர் தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை குறித்த விண்ணப்ப விவரங்கள் இணையம் மூலம் மே 27 முதலே பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மேற்கண்ட பிரிவுகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 20-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-