அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வெளிநாட்டு தொழிலாளார்கள் உட்பட 43 இலட்சத்திற்கு அதிகமாக நபர்கள் DNA மாதிரிகள் எடுக்கப்படும்:
         குவைத்தில் உள்ள முக்கிய பள்ளியில்
கடந்த வருடம் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட 23
 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தது நினைவு இருக்கலாம்.
   இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத்தில் உள்ள குவைத் நபர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளார்கள் உட்பட அனைவருடைய DNA மாதிரிகள் எடுக்கப்படும் என்று அன்றே
குவைத் அரசு அறிவித்திருந்தது.
    இதன்படி இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி
குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளார்கள் உட்பட 43 இலட்சத்திற்கு அதிகமாக நபர்கள் DNA மாதிரிகள் எடுக்கப்படும்.
   இதற்கு குவைத்தில் மூன்று மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக குவைத் குடிமக்களின் DNA மாதிரிகள் எடுக்கப்பட்டும்.
    குவைத் மக்களுக்கு புதிதாக அறிவித்துள்ள Electrical Passport  (மின்னணு கடவுச்சீட்டு)  பெற இந்த DNI மாதிரிகள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த DNA மாதிரிகள் நாட்டின் பாதுகாப்பு
காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-