அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இலவச ரோமிங் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க உள்ளதாக பொதுத்துறை நிறுவனமான BSNL அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,வாடிக்கையாளர்களின் பேராதரவை கருத்தில் கொண்டு இலவச தேசிய ரோமிங் வசதியை மேலும் ஒரு வருடம் நீடிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
TRAI அறிக்கையின் படி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் BSNL அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக, அதன் நுகர்வோர் இயக்குனர் ஆர்.கே.மிட்டல் தெரிவித்தார்.
BSNL-ன் தேசிய இலவச ரோமிங் வசதி கடந்த ஆண்டு ஜீன் மாதம் தொடங்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதோடு, பலர் இந்த வசதிக்காகவே மற்ற நெட்வர்க்கில் இருந்து BSNL-க்கு தங்கள் மொபைல் எண்ணை மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-