அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கானூர் கிராமத்தை சேர்ந்தவர் விமலா (28). இவருடைய செல்போன் பேட்டரியை சார்ஜரில் போட்டு இருந்தார். அந்த சமயத்தில் அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. விமலா அவசரத்தில் சார்ஜரில் போட்டு இருந்த மின்சார சுவிட்சை அணைக்காமல் அப்படியே போனை எடுத்து பேசினார்.

அடுத்த சில வினாடிகளில் அந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் விமலாவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அப்போது அருகில் இருந்த ரஜிதா என்ற பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-