அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலையான இளம்பெண் பார்ப்பண வகுப்பைச்சார்ந்தவர் .ஆனால் கொலையாளி யார் என்று இதுவரை அறியப்படவில்லை .

இதுவரை தமிழகத்தில் எத்தனையோ இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் ஆனால் இவர்கள் யாரும் பார்ப்பணர்கள் இல்லை அதனால் இந்த காவிகள் எதையும் கண்டுகொள்ள வில்லை .இந்த பார்ப்பண பெண் கொலையானவுடன் எச்ச ராஜா பாஜக நிர்வாகிகளுடன் அந்த பெண் வீட்டிற்கு சென்று ஆறுதல் என்ற பெயரில் அரசியல் ஆரம்பித்துவிட்டனர் .

இவர்கள் அங்கு சென்று ஆறுதல் தெரிவித்தவுடன் காவிகள் முகனூலில் கொலையாளி பெயர் பிலால் என்றும் இஸ்லாமிய பயங்கரவாதி எனவும் பதிவிட்டு பிரச்சினையை திசை திருப்பி இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட தூபம் போட்டுக்கொண்டிருக்கின்றனர் .

இதற்கு தக்கவாறு திருப்பூர் குமரன் காலணி பகுதியில் தமுமுகவின் கொடிகம்பம் அருகில் காவி கொடியை ஏற்றி தமுமுக போர்டு இருந்ததை பிடுங்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் ஆர்எஸ்எஸ் போர்டை வைத்துள்ளனர் .இது வன்மையான கண்டனத்திற்கு உரியது .

இது போன்ற வன்முறையை தூண்டும் நோக்கத்தில் செயல்படும் சமூக விரோதிகளை தமிழக அரசு உடனே கண்டுபிடித்து தண்டனை தரா விட்டால் தமிழகம் கலவர பூமியாக மாறும் அபாயம் உள்ளது .

.

படம் உதவி : Abdul Rahman

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-