அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 பாடாலூர், ஜூன்.18-

வெங்காயத்திற்கான வணிக நகரமாக பெரம்பலூரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

பயிற்சி முகாம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகம் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் வெங்காயத்தில் இருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும் உப்புக்கரைசலில் ஊற வைத்த வெங்காயம் உள்ளிட்டவைகளை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடா¢பான செயல்முறை விளக்கங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

அதனை தொடா¢ந்து வயல் வெளிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் சிறிய வெங்காயத்தை அதிக நாட்கள் நிறம் மாறாமல் மற்றும் எடை குறையாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வெங்காய சேமிப்பு பட்டறையின் அமைப்பு மற்றும் செயல் விளக்கங்கள் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகத்தின் அலுவலர்கள் மூலமாக அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் பேசியதாவது;-

வணிக நகரம்

சின்ன வெங்காயம் அந்நிய செலவானி வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய ஒரு முக்கியமான பயிர். சின்ன வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெங்காயத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது மற்றும் அதனை விற்பனை செய்வது தொடர்பான செயல்முறைகளை கற்பதன் மூலமாக வெங்காய விலை வீழ்ச்சி அடையும் போது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படாது. மேலும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள், தமிழக அளவில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை உலகளாவிய வெங்காயத்திற்கான வணிக நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வெங்காயத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற தேவையான இடவசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் இந்திய பயிர¢ பதன தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜெகன்மோகன், மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள் குறித்தும், டாக்டர் சினிஜா வெங்காய சேமிப்பில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும் பேசினர். வேளாண்மை இணை இயக்குனர் சந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) சர்புதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், வேளாண் அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-