அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கடந்த வாரம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் சாலை ஓரத்தில் உள்ள புதருக்கு அருகில் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு அவர் யார் என்ற விசாரனையை மேற்கொண்டார்.

விசாரனையில் அவர் நாகூரை சார்ந்த அப்துல் மஜித்(வயது 80) என்பது தெரிய வந்தது.அவரது மனைவி மற்றும் தங்கை நூர் என்பவரும் நேரில் வந்து பார்த்து அவரை உறுதி செய்தனர்.
தங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால் அவரை இங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று த,மு,மு,க மாவட்டச்செயலாளர் ரஷீத் அஹமது அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினார் ஆய்வாளர். உடனடியாக களத்தில் இறங்கிய த.மு.மு,க வினர் நகரச்செயலாளர் முஹம்மது ஹனீபா, ஜக்கிரியா ஆகியோர் மருத்துவமனை சென்று பிரேதப்பரிசோதனை ஏற்ப்பாடுகளை செய்தனர்.
கவுன்சிலர் ரஹமத்துல்லா,முஹம்மது இக்பால் உள்ளிட்ட ஜமாத்தினர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யும் ஏற்ப்பாடுகளை செய்தனர்.09.06.14 அன்று மதியம் 12 மணி அளவில் போஸ்ட்மார்டம் முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மையவாடியில் ஜனாஸா கொண்டு வரப்பட்டது.

முன்னதாக த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலமாக இலவசமாக ஜனஸாவை நாகூரிலேயே கொண்டு வந்து சேர்க்கிறோம் என்று மாவட்டச்செயலாளர் ரஷீத் அஹமது கூறிய போதும் தங்களுடைய வரிய நிலையை எடுத்துக்கூறி இங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் எனக்கூறியதால்மவுலானா முஹம்மது சல்மான் அன்வாரி கஃபனிட்டு ஜனாஸா தொழுகை நடத்தினார். பிரேதம் மிகவும் சேதமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வரிய நிலையில் இருந்த அந்த ஏழ்மை குடும்பத்தின் பயண மற்றும் இதர செலவுகளுக்காக ரூ3000 தந்து அனுப்பி வைக்கப்பட்டனர். குன்னம் ஆய்வாளர் த,மு,மு,க வின் இந்த பணிக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மறுமை வெற்றியை மனதில் கொண்டு களப்பணியாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக.....

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-