அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரும்பாலும் உங்களை அழைக்க விமான நிலையத்திற்கு ஊரிலிருந்து உறவினர்கள் வருவார்கள்
அப்படி கார்,வேன்,போன்ற வாகனங்களில் வரும்போது முடிந்தளவுக்கு இரவுப்பயணத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் .

கார்,வேன் போன்ற வாகனங்களில் வரும்போது முதலில் நல்ல டிரைவராக தேர்வு செய்யுங்கள் குறிப்பாக குடிப்பழக்கம் இல்லாதவராக இருந்தால் இன்னும்நல்லது சென்னையில் இருந்து  ஊர் வருவதாக இருந்தால் இரவில் மட்டும் கிழக்கு கடற்கரைச்(ECR,ROAD)சாலையை தவிர்த்துக்கொண்டு தாம்பரம்,திண்டிவனம்,பாண்டி,கடலூர்,அல்லது தாம்பரம் ,திண்டிவனம்.பண்ருட்டி,சேத்தியாத்தோப்பு,சிதம்பரம் வழியாகவும் வரலாம்; ..திருச்சி விமான நிலையத்திலிருந்து இரவுப்பயணத்தின்போது பைபாஸ் சாலையை பயன்படுத்தவேண்டாம் ,மெயின் ரோட்டைப் பயன்படுத்துங்கள் .திருச்சி,திருவெறும்பூர்,வல்லம்,தஞ்சை வழியாகவும் வரலாம் .
வாகனம் ஓட்டும்போது நள்ளிரவு ஒருமணிக்கு மேல்தான் ஓட்டுனருக்கு அப்படிஒரு அசதிவரும் அவரும் மனிதர்கள்தான் முடிந்தவரை அவரிடம்பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருங்கள்.
வண்டி ஓட்டும்போது செல்போன் பேசவேண்டாம் .

உங்கள் இன்பப்பயணம் இனிமையாக அமைந்து உங்கள்குடும்பத்தோடு நோன்புப்பெருநாளை சிறப்போடு கொண்டாட உங்களோடு நானும் அல்லாஹ்விடம்
துஆ செய்கிறேன் .வாகனத்தில் ஏறும்போது பயண துஆ வை மறக்காதிர்கள் .

முகநூல் பதிவு Nidur Mohamed Nizar

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-