அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஒரு நாள் குஜராத்துல இருந்து டெல்லி போற ரயிலுல மோடியும் முல்லாவும் பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க .
ஒரே ஊதக்காத்து அது முல்லாவுக்கு ஒத்துக்கல அதனால ரயில் ஜன்னல மூட முயற்சி செஞ்சாரு அவரால அத மூட முடியல உடனே நம்ம மோடி அந்தப்பக்கம் நகருன்னு சொல்லிட்டு ஜன்னல ஒரே இழுப்பல இழுத்து மூடிட்டு முல்லாவ பாத்து பதஞ்சலி நூடுல்ஸ் சாப்பிடு பலம் வரும்னு சொல்லிட்டு போய் ஒக்காந்துக்கிட்டாரு ..
முல்லாவுக்கு ஒரே அவமானமாப்போச்சு அடிச்ச ஊதக்காத்துல யூரின் வேற முட்டிக்கிட்டு வந்துடுச்சு பக்கத்தில் இருந்த டாய்லெட் போலாம்னு எந்திருச்சு போய் கதவ தொறந்தா தொறக்க முடியல டைட்டா இருந்துச்சு இதப்பாத்த மோடி எந்திருச்சுப்போய் முல்லாவ நகரச்சொல்லிட்டு ஒரே தள்ளுல கதவ தொறந்து வுட்டுட்டு பதஞ்சலி நூடுல்ஸ் சாப்பிடு பலம் வரும்னு சொல்லிட்டு போய் ஒக்காந்துட்டாரு ..
டாய்லெட் போயிட்டு வந்த முல்லாவுக்கு மோடிய பாக்க பாக்க ஒரே அவமானமா இருந்துச்சு நம்மள போயி பதஞ்சலி நூடுல்ஸ் சாப்பிடுன்னு சொல்லியாச்சேன்னு ..
கொஞ்ச நேரம் கழிச்சு ரயில நிப்பாட்ட ஒரு செயின் இருக்குமே அத பிடிச்சு இழுக்கற மாதிரி பாவ்லா பன்றாரு முல்லா உடனே நம்ம பதஞ்சலி பயில்வான் மோடி எந்திருச்சு முல்லாவப்பாத்து அந்தப்பக்கம் போன்னு சொல்லிட்டு ஒரே இழுப்பா இழுத்து ரயில நிப்பாட்டிட்டு திரும்பவும் முல்லாவப்பாத்து பதஞ்சலி நூடுல்ஸ் சாப்பிடு பலம் வரும்னு சொல்லிட்டு ஒக்காந்துட்டாரு ..
ரயில நிப்பாட்டினதால டிடிஆர் வந்து யாரு செயின பிடிச்சு இழுத்து ரயில நிப்பாட்டினதுன்னு கேட்டதும் நம்ம பதஞ்சலி பயில்வான் மோடி காலர தூக்கிவுட்டுக்கிட்டு நான்தான் இழுத்து நிப்பாட்டினேன் அப்படீன்னு பந்தாவா சொன்னாரு ..
ஒடனே டிடிஆர் ஐநூறு ரூபாய்க்கு ரசீத கிழிச்சு மோடி கையில கொடுத்துட்டு ஐநூறு ரூபாய ஆட்டைய போட்டுட்டு போயிட்டாரு ..
மோடி "ஙே" ன்னு முழிச்சுக்கிட்டிருந்தாரு ஒடனே நம்ம முல்லா மோடிய பாத்து மாட்டுக்கறி சாப்பிடு புத்தி வளரும்னு சொல்லிட்டு ஒக்காந்துட்டாரு ..
முல்லான்னா அஞ்சுக்கும் பத்துக்கும் ஆட்டையும் மாட்டையும் அறுத்துக்கிட்டு தலைல ஒரு தலப்பாவ கட்டிக்கிட்டு கூப்பிட்டா சொல்லுங்க முத்தவல்லின்னு சலாம் போடற முல்லான்னு நெனச்சயா ...முல்லாடா ...!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-