அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

 பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு விடும் போது பேரிச்சம் பழம் மற்றும் தண்ணீர் அல்லது பாலைக் குடிப்பார்கள். இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் நோன்பு நீண்ட நேரம், அதுவும் அதிகாலை முதல் மாலை வரை எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருப்பதால் உடலின் ஆற்றல், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை குறைந்திருக்கும்.  இதனை சரிசெய்யவே இஸ்லாமியர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருகிறார்கள். ஏனெனில் பேரிச்சம் பழம் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை வழங்கி மற்றும் ஆற்றலை அளிக்கும். இதற்கு பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, பொட்டாசியம், சுக்ரோஸ், குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சத்துக்களே காரணமாகும். தினம் ஒரு உலர்ந்த  
 அதுமட்டுமின்றி, பேரிச்சம் பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானத்தின் வேகத்தை குறைத்து, ஆற்றலை மெதுவாக வெளியேற்றும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கிறது. மேலும் பேரிச்சம் பழம் நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.  சரி, இப்போது பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் வேறு நன்மைகளைப் பார்ப்போமா!!!  
1/10 ஆற்றலை வழங்கும் பேரிச்சம் பழம் 

உடலின் ஆற்றலை உடனே அதிகரிக்கும் திறன் கொண்டது. இதற்கு அதில் உள்ள குளுக்கோஸ், புருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தான் காரணம்.

 2/10 கொலஸ்ட்ராலைக் குறைக்கும் 

நோன்பு இருக்கும் போது, உடலில் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறை தொடர்ந்து நடைபெறும். அதனை சீராக நடத்த பேரிச்சம் பழம் உதவியாக இருக்கும். முக்கியமாக பேரிச்சம் பழம் கொலஸ்ட்ராலை கரைத்து உடலில் இருந்து வெளியேற்றி, இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். 3/10 நோய்த்தொற்றுகளைக் கொல்லும் பேரிச்சம் பழம் உடலைத் தான் ஒருசில நோய்த்தொற்றுகளில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் ஆய்வு ஒன்றில் பேரிச்சம் பழம் 50 சதவீதம் ஆன்டிபயாடிக் பென்சிலின் போன்று செயல்படுவதாக சொல்கிறது. 4/10 மலச்சிக்கலைத் தடுக்கும் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை குடலியக்கத்தை சீராக செயல்படுத்தும். இதனால் செரிமானம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். 5/10 வலிமையான எலும்புகளுக்கு பேரிச்சம் பழத்தில் கனிமச்சத்துக்களான காப்பர், செலினியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையோடு வைத்துக் கொள்ளும். 6/10 புற்றுநோயைத் தடுக்கும் பேரிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும். மேலும் கல்லீரலை சுத்தப்படுத்தும் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். 7/10 இரத்த சோகை பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் இரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும். 8/10 பக்கவாதம் மற்றும் மாரடைப்பு பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மக்னீசியம் இதயத்திற்கும், இரத்த குழாய்களுக்கும் நல்லது. எனவே பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக செல்லும். எனவே இதயம் ஆரோக்கியமாக செயல்பட தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வாருங்கள். 

9/10 கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால், இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம் தடுக்கப்படும் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் பேரிச்சம் பழம் பிரசவத்தை சுலபமாக்க உதவும். 

 10/10 இரத்த அழுத்தம் 

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தை சீராக்கும்.  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-