அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...காஷ்மீர் மாநில  தலைநகர் ஸ்ரீநகரில் கரண் மார்க்கெட் பகுதியில் நேற்று வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகைக்காக மக்கள் கூட்டம் அதிகம் வந்து விட பள்ளிவாசல் உள்ளே இடம் இல்லாமல் அதிகமான மக்கள் நின்று தொழுகையை நிறைவேற்ற முயன்ற நேரத்தில் விற்பணைக்காக வைத்து இருந்த புத்தம் புதிய துணி விரிப்பை பெரும் திரளாக திரண்டு இருந்த மக்களுக்கு கொடுத்து உதவி செய்து மாபெரும் மனித நேயத்தை வெளிக் காட்டி இருக்கிறார் நேசமிகு  சீக்கிய சகோதரர் ஒருவர்!

இந்தியாவில் மதவெறியை தூண்டி முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

சரியான புரிதலும் சகோதரத்துவமும் மனித நேயமும் அன்பும் பாசமும் எங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கெல்லாம் மகத்தான மாண்புமிகு மனிதர்களைக் காண முடியும் மதவெறியர்களுக்கு அங்கு வேளையும் இல்லாமல் போய்விடும்காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரிலுள்ள கரன் நகர் மார்கெட் பள்ளிவாசல் அருகில் நடைபாதையில் கடை வைத்துள்ளார் சீக்கிய முதியவர்.துணிக்கு முஸ்லிம்கள் பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்.

தம்முடைய துணியின் மீது இஸ்லாமியர்கள் இறைவனை வணங்குவதை காணும் முதியவர் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-