அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தார் நாட்டில் இந்திய தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அவர்களுடன் உணவருந்தி கலந்துரையாடினார்.


கத்தார்:

6 நாள் பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பயணத்தின் முதல் நாளான இன்று ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். அங்கு இந்தியா சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஹெராத் மாகாணத்தில் ஈரான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சிஸ்ட்- இ- ஷரிப் என்ற இடத்தில் உள்ள சல்மா அணையை திறந்து வைத்தார்.

ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி கத்தார் நாட்டிற்கு சென்றார். அங்கு தொஹா நகரில் இந்திய தொழிலாளர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.மேலும் இந்திய தொழிலாளர்களுடன் உணவை பகிர்ந்து கொண்ட மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

மருத்துவ முகாமில் தொழிலாளர்களிடையே மோடி பேசியதாவது:

தொஹா நகர் வந்ததும் என்னுடைய முதல் நிகழ்ச்சி உங்களோடு தான். இந்தியாவில் இருந்து வந்துள்ள மருத்துவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்கிறார்கள்.

நம்முடைய மொழியில் யாராவது பேசினால் பாதி தனிமை அதனால் போய்விடுகிறது. இங்குள்ள மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் தனிமை ஒர் நோயாக உள்ளது. அப்போது நம்மை சிலர் நலம் விசாரிக்கும் போது கொஞ்சம் நன்றாக இருக்கிறது.

இந்தியாவை பற்றிய எண்ணங்கள் நம்முடைய தூதரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவாவது இல்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களினால் உருவாகிறது.


கடுமையான உழைப்பிற்காக இந்தியர்கள் பாராட்டபடுகிறார்கள். வாழ்க்கையில் மாற்றம் வேண்டி நீங்கள் உழைப்பதை நான் உணர்கிறேன்.

உங்களின் பிரச்சனைகளை நான் அறிவேன். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை என்னால் பட்டியலிட முடியும். உங்கள் எல்லோர் மீதும் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-