அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கடந்த பல சகாப்தங்களாகவே, "முன்னேறிய நாடு", " முன்னேறும் நாடு" எனும் சொற்கள்தான் அந்நாட்டின் பொருளாதார நிலையைக் குறிக்கும் சொற்களாக இருந்தன. இன்று உலக வங்கி மிகவும் துல்லியமான மற்றும் நேரடியான விளக்கத்தைக் கொண்டு வந்துள்ளது.தற்போது உலக நாடுகளை, Gross National Incomeஐ அடிப்படையாக வைத்து 4 விதமாக நாடுகளை பிரித்துள்ளனர்:

√ குறைந்த வருமான பொருளாதாரம் (low-income economy):

தனி நபர் ஒருவருக்கான GNI $1,045(ரூ.70,098) அல்லது குறைவு.

√ குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரம் (lower middle income economy):

தனி நபரின் GNI $1,046 (ரூ.70,165ல் முதல் $4,125(ரூ.2,76,705) வரை.

√உயர் நடுத்தர வருமான பொருளாதாரம் (upper middle income economy):

தனி நபரின் GNI $4,126(ரூ.2,77,083) முதல் $12,735(ரூ.8,54,263) வரை.

√ மேல் பொருளாதார நாடுகள் (Top economy):

தனி நபரின் GNI $12,736(ரூ.8,54,330) அதற்கு மேல்.

இப்படி வகைப் படுத்தியதில், மெக்ஸிகோ, பிரேசில், சீனா முதலிய நாடுகள் upper middle income economy நாடுகள்; இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசம் முதலிய நாடுகள் lower middle income economy நாடுகள். இத்தனை நாட்களாக நாம் அனைவரும் வளர்ந்து வரும் நாடுகள் என அழைக்கப்பட்டோம்.

இந்தியா மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள், தொழிலாளர் பங்கேற்பு விகிதம், மின்சார உற்பத்தி போன்ற விஷயங்களில் சற்று பின்தங்கியுள்ளது. ஆனாலும், 5 வயதுக்குட்பட்டோரின் இறப்பு விகிதம், பிரசவ நேரத்தில் நிகழும் மரணம் ஆகிய விஷயங்களில் இந்தியா பல மடங்கு முன்னேறியுள்ளது.

இருப்பினும், ஒரு தொழில் தொடங்க இந்தியாவில் 29 நாட்கள் தேவைப்படும். அதேபோல, 40% இந்தியர்களுக்குத்தான் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைப் பெறும் வசதி உள்ளது. இதுவும் உலக சராசரியைவிடக் (68%) குறைவு.

எனினும் இப்போது வரை "வளரும் நாடு" எனும் பொதுவாக அழைக்கப் பட்டுக் கொண்டு இருந்த இந்தியா, இனிமேல் "குறைந்த நடுத்தர வருமான நாடு" என வகைப் படுத்தப்படும் என்பது சற்று அதிர்ச்சியான தகவல்தான்.

ந. ஆசிபா பாத்திமா பாவா

(மாணவப் பத்திரிக்கையாளர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-