அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர், ஜூன்.28.
 வி.களத்தூரில் இயங்கிவரும் ஐடியல் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் பொருட்டு, ஐடியல் பள்ளியும், ஆங்கிலக் கல்வி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன. இன்று முதல் இதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது . இதுகுறித்து நேற்று 27-06-2016 திங்கள் கிழமை நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் ஐடியல் பள்ளி இயங்கிவருகிறது. இப்பகுதியின் சிறந்த பள்ளியாகவும் பெற்றோர்-மாணவர்களின் விருப்ப பள்ளியாகவும் இயங்கிவருகிறது..

மாணவர்களின் நலனுக்காக ஐடியல் பள்ளி,பல்வேறு சிறப்பு பயிற்சிகளை இலவசமாகக் கொடுத்து வருகிறது. அதன்படி ஏற்கனவே, கையெழுத்துப் பயிற்சியை இலவசமாக பயிற்றுவித்துவருகிறது.

இந்த ஆண்டு ஐடியல் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்துவந்தது.. அதன்படி ஆங்கிலக் கல்வி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஆங்கில மொழிப்பயிற்சியை அளிக்க தீர்மானதித்தது.

இன்று திங்கள்கிழமை 27-06-2016 அன்று மதியம் ஐடியல் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை பள்ளியில் நிர்வாக இயக்குநர் கமால் பாஷா அறிவித்தார்.

இது குறித்து பள்ளியின் தாளாளா் மஹஸர் அலி கூறும்போது, “ பள்ளி மாணவர்களின் மொழித்திறமையை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டோம். அதற்காக சிறந்த நிறுவனம் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். பின்னா் அதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பேச்சு வார்த்தை நடத்தினோம். .அதற்கான சூழல் தற்போது ஏற்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எங்களது இந்தப் பயிற்சி வெற்றிகரமாக அமைய பெற்றோரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்., இந்தப் பயிற்சி இந்த ஆண்டு மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆங்கிலப்புலமை பயிற்சி வகுப்புகள் இன்றுமுதல் தொடக்கப்பட்டு விட்டது. ” என்று தெரிவித்தார்.

இது குறித்து ஆங்கில மொழி பயிற்சி நிறுவன மேலாளர் ஸ்டாலின் பேசும்போது,’ நாங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆங்கில மொழிப்பயிற்சியை அளித்து வருகிறோம். ஆனால் வி.களத்தூர் ஐடியல் பள்ளி மட்டும்தான் மாணவர்களுக்கு இலவசமாக இந்த சேவையை வழங்குகிறது. இது பாராட்டதக்கது.. பெற்றோரின் சுமைகளை குறைத்து நல்ல சேவை செய்து வருதற்கான எடுத்துக்காட்டாகும். ஐடியல் பள்ளியின் இந்த சேவையை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நாங்கள் தரும் பயிற்சிகளை பெற்றோரும் தங்கள் வீடுகளில் மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு இது முழுமையாக சென்றடையும்.’ என்று தெரிவித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் கூறும்போது, ’ நமது, வி.களத்தூர், பசும்பலூர், பேரையூர், தைக்கால், மரவனத்தம். பிம்பலூர் உள்ளிட்ட கிராம மக்களின் முதன்மையான தேர்வாக ஐடியல் பள்ளி விளங்கி வருகிறது. நமது வட்டார மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பாடுபடும் பள்ளி நிர்வாகத்தின் சேவை பாராட்டுக்கு உரியது. ஐடியல் பள்ளி மாணவர்களின் மொழித்திறன் மேலும் மேம்படுவதற்கான முயற்சியை மேற்கொண்டு உள்ளோம். இதுபோன்ற சேவையில் ஐடியல் பள்ளி தொடா்ந்து ஈடுபட்டு மாணவா்களின் நலனுக்கு சிறப்பாக செயல்படும். இதற்கு பெற்றோர்களும் தொடா்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-