அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வேப்பந்தட்டை. ஜூன் 8. வி.களத்தூர் சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க கோரி வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்தில் நேற்று காலை 9 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைப்பெற்றது. இந்த உண்ணாவிரதம் போரட்டதிற்க்கு ஆம் ஆத்மியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் திருமதி அன்பு சிவகாமி அவர்கள் தலமையில் வி.களத்தூர் மக்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் பேசிய மாவட்ட துணை தலைவர் முஹம்மது இக்பால் அவர்கள் வி.களத்தூரில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாக்கடை பிரச்சினை உள்ளது. கடந்த 8 மாதம் முன் தமிழக அரசு இந்த சாக்கடை பணிகளுக்கு 10 இலட்சம் நிதி ஒடுக்கியது. ஆனால் வி.களத்தூர் ஊராட்சி நிர்வாகம் இந்த வேலை ஆரம்பிக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஊராட்சி தலைவரிடம் ஏன்? இன்னும் வேலை ஆரம்பிக்க வில்லை நேரடியாக பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லை

எனவே வி.களத்தூர் மக்களுக்காக இந்த போரட்டம் நடத்த அனைத்து இடங்களிலும் அனுமதி பெற்று நடைப்பெருகிறது. இந்த போராட்டம் நடத்த சிலர் எங்களை மிரட்டினார். அதையும் மீறி இப்போராட்டம் சிறந்த முறையில் நடைப்பெற்று வருகிறது என பேசினார். பின் மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் அன்பு சிவகாமி அவர்கள் இந்த உண்ணாவிரதம் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார். இந்த போராட்டதில் ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் முபீன்,சோமசுந்தரம்(மா.து.செயலாளர்),செளந்தர்(மா.பொருளாளர்), பொன்னு சாமி(பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி செயலாளர், ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் வி.களத்தூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  


உண்ணாவிரதம் வெற்றி! 
வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி நூருல் ஹுதா இஸ்மாயில் அவர்கள் நேரில் வந்து ஆம் ஆத்மி தலைவர் திருமதி அன்பு சிவகாமி அவர்களிடம் வரும் ஜூலை 10ம் தேதிக்குள் இந்த வேலை முடித்து விடுவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர். ஜுலை 10 க்கு மேல் இந்த பணிகளை தொடங்க விட்டால் ஆம் ஆத்மி கட்சி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்து உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-