அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் துரைபாட்டு பகுதியில் சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் வரும் செவ்வாய் கிழமை (7-6-2016) வேப்பந்தட்டை யூனியன் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளது.  இது பற்றி நமது செய்தியாளர் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட துணை தலைவர் முஹம்மது இக்பால் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதவது வி.களத்தூர் இந்த சாக்கடை திட்டத்திற்கு முந்தைய அதிமுக அரசு 10 இலட்சம் நிதியை 8 மாதம் முன்பே ஒடுக்கிடு செய்தது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை செயல் படுத்த இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது பற்றி ஊராட்சி தலைவரிடம் எங்கள் கட்சி நேரடியாக சந்தித்து ஏன்? இன்னமும் வேலை தொடங்க வில்லை என்று கேட்டோம். அதற்கு அவர் இன்னும் 10 நாளில் தொடங்கும் என கூறினார். இது போல பல 10 நாட்கள் ஆகிவிட்டது. எப்போது கேட்டாலும் அலட்சியமாக பதில் கூறுகிறார். இந்த திட்டதிற்க்கு முதல் கட்டமாக 3 இலட்சம் வந்து பல நாட்கள் ஆகிறது. வீனாக தூங்கு கிறது.  இனி இவரை நம்பினால் எந்த வேலையும் நடக்காது. எனவே போராட்டம் அறிவிப்பு வெளியிட்டோம். இந்த போராட்டத்தில் வி.களத்தூர் மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-