புத்தி சுவாதீனமுள்ள,
பருவமடைந்த, ஊரில் இருக்கக்கூடிய
நோன்பு நோற்க சக்தியுள்ள
ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண்
அனைவருக்கும் நோன்பு நோற்பது
கடமையாகும்
.
நோன்பை விடுவதற்கு
யாருக்கு சலுகை இருக்கிறது?
இந்த சலுகைகளையுடையவர்கள்
என்ன நோன்பு நோற்பதற்கு
பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்?
நோன்பை விட்டுவிட
சலுகைகளையுடையவர்கள்:
1. தற்காலிக நோயாளி (குணமாக
கூடிய நோயாளி): நோன்பு
நோற்பது இவருக்கு சிரமமாக
இருந்தால் இவருக்கு நோன்பை
விட்டுவிட சலுகை இருக்கிறது.
ஆயினும் விடுபட்ட நோன்பை
பின்னர் நோற்க வேண்டும்.
2. நிரந்தர நோயாளி: நோய்
குணமாகாது என்ற அளவிற்கு
நிரந்தர நோயாளியாக இருப்பவர்
நோன்பு நோற்பது கட்டாயமில்லை.
ஆயினும் அவர் அதற்கு பகரமாக
ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு
உணவளிக்க வேண்டும்
.
3. பயணி: பயணிகளுக்கு அவர் தன்
ஊருக்கு திரும்பி வரும்வரை
நோன்பை விட்டுவிட
சலுகையிருக்கிறது.
பிரயாணி தன்
பிரயாணத்தை முடித்துக்
கொண்டதும் விட்ட நோன்புகளை
நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும்
தாய்: இவர்கள் நோன்பு நோற்பதினால்
தனக்கோ அல்லது குழந்தைக்கோ
ஏதும் ஆபத்து ஏற்படுமென்று
பயந்தால் நோன்பை விட்டுவிடலாம்,
இவர்கள் குழந்தையை
பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது
பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட
நோன்புகளை நோற்க வேண்டும்.
5. நோன்பு நோற்க இயலாத
முதியவர்கள்: இவர்களுக்கு நோன்பை
விடுவதற்று அனுமதி உண்டு.
இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு
ஏழைக்கு வீதம் உணவளிக்க வேண்டும்.
அல்லாஹ் நன்கறிந்தவன்.
நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?
யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.