அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
முசாபர்  தலைநகர் உத்திரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய கைதிகளுடன,சேர்ந்து 65 இந்து சகோதரர்களும், புனித ரமலான் மாதத்தின் நோன்பை நேற்று முதல் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

ஜெயில் சூப்பிரண்ட் கூறுகையில் இஸ்லாமியர்களின் நோன்பு காலம் என்பதால் அவர்கள் தொழுவதுக்கும்.சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் நோன்பு திறக்கும் போது பழங்கள்,பால்,மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவை ஜெயில் சார்பாக அவர்களுக்கு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

#இந்துவேறு 

#இந்துத்துவா_வேறு என்பதை இங்கே நாம் காண முடிகிறது.

#ஒற்றுமையை_பலப்படுத்துவோம்

காவியின் மூஞ்சில் கரியை பூசுவோம் 


முசாபர்நகர்: உத்திரப்பிரதேசத்தில் முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து இந்துக் கைதிகளும் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான இந்த செயல் பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள மாவட்ட சிறையில் 1150 முஸ்லீம் கைதிகள் உள்ளனர். இவர்கள் தற்போது ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து அங்குள்ள 65 இந்துக் கைதிகளும் தினசரி நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். ரமலான் நோன்பின் முதல் நாளான நேற்று முஸ்லீம் கைதிகளுடன் இந்துக் கைதிகளும் நோன்பு கடைப்பிடித்ததாக ஜெயிலர் சதீஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். கைதிகள் நோன்புக் காலத்தின்போது தொழுகை நடத்த வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தக் குறையம் இல்லாத வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்தாகவும் அவர் கூறியுள்ளார். நோன்பு காலத்தில் உலர் பழங்கள், பேரீச்சம்பழம், அரை லிட்டர் பால், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவையும் கைதிகளுக்கு தரப்படுகிறது.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-