அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏர்வாடி (இராமநாதபுரம் ) கொம்பூதி முக்கு ரோடு பெட்ரோல் பல்க் அருகில் இன்று இரவு 11.30 மணி அளவில் மிக பெரிய விபத்து
கீழாக்கரை சின்னக்டை தெருவை சேர்ந்த அப்துர்ரஹ்மான், இப்ராஹிம், ராஷித், பாஹித் ஆகிய 4 இளைஞர்கள் ஏர்வாடிக்கு ஸுகூட்டி பைக்கில் வந்து விட்டு திரும்பும் போது துத்துக்குடிக்கு மீன் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார்கள் சம்பவ இடத்திலேயே 4 இளைஞர்கள் பலியானர்கள்.

பைக் விபத்து நடக்காத நாளும் இல்லை,உயிர் பலி ஏற்படாத விபத்தும் இல்லை!

சற்றுமுன் கிடைத்த தகவல் படி 2 பேர் கீழக்கரையை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் மற்ற இருவர் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் பைக்கில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரை வரும் வழியில் விபத்து ஏற்பட்டு ஸ்பாட்டிலேயே இருவர் மௌத்தானதாக செய்தி வந்துள்ளது.

பிள்ளை ஆசைப்பட்டதும் கடன் பட்டாவது பைக் வாங்கி கொடுத்து விடும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பைக் மட்டும் வாங்கி கொடுப்பதில்லை. கூடவே இஸ்ராயீல்(அலை)அவர்களின் நட்பையும் இணைத்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மனப்பக்குவமில்லா பிள்ளைகளுக்கு தற்போதைய போக்குவரத்து சூழலில் பைக் வாங்கி கொடுப்பது பேராபத்து என்பதை உணர மறுக்கும் பெற்றோர்களே….ஒருமுறை இழப்பானாலும் தம் வாழ்நாள் முழுவதும் நம்மை அது பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு காலத்தில் பைக் அதிகமாகவும் கார்கள் குறைவாகவும் ரோடுகளில் ஓடிய நிலை மாறி இன்று கார்கள் அதிகமாகவும் பைக் குறைவாகவும் ஓடும் காலமிது.

கார்கள்,லாரிகள்,பேரூந்துகள் அதிகமாகி ஒன்றுக்கொன்று முந்தி செல்லும் சூழலில் பைக்கில் செல்பவர்களை கண்டு கொள்ளாத அபாயகரமான சூழலில் நமது பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுப்பது சரியா?என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.

நமது பிள்ளைகளும் பைக்கில் செல்லும் போது நடுரோட்டில் அளவுக்கு அதிகமான வேகத்தில் பைக் ஓட்டும் குலை நடுங்கும் சாகசம் கண்டு ஒவ்வொரு முறையும் நமக்கே உயிர் போய் வருவது போல் இருக்கிறது.

இனிவரும் காலங்களிலாவது அல்லாஹ் அனைத்து மக்களையும் விபத்துகளிலிருந்து பாதுகாப்பானாக.
கவலையுடன்
-கீழை ஜஹாங்கீர் அரூஸி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-