அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை: இன்றைய அதிநவினமயமாக்கப்பட்ட வங்கித் துறையில் சேமிப்பு கணக்குகளை நொடிப் பொழுதில் துவங்கும் அளவிற்கு இந்திய வங்கிகளும் வங்கி அமைப்புகள் உயர்ந்துள்ளது. ஆனால் எத்தனை பேரிடம் ஒன்றுக்கு அதிகமான கணக்குகள் உள்ளது..?

தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை வைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம்.

எப்படி..?நிதி மேலாண்மை


ஒரு தனி மனிதன் எப்படித் தன்னுடைய நிதியைச் சேமித்தும், முதலீடு செய்து, செல்வத்தைப் பெருக்குகிறான் என்பதே நிதி மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இதை ஒரு நிறுவனத்துடனோ அல்லது ஒரு நாட்டுடன் கூட நீங்க ஒப்பிட்டுப் பார்க்கலாம். இத்தகைய நிதி மேலாண்மைக்கு வித்திடுவது சேமிப்பு கணக்கு தான்.

சேமிப்பு...


நம்முடைய தேவைகளைச் சரியான வழியில் பூர்த்திச் செய்துகொண்டு ஆடம்பர மற்றும் வீண் செலவுகளைக் குறைத்துக்கொண்டாலே சேமிப்பு என்ற ஒன்று தானாகவே உருவாகும்.

இத்தகைய சேமிப்பு நம்முடைய அவசர தேவை கண்டிப்பாக ஈடு செய்யும். இப்படி அவரச காலங்களில் நமக்கு உதவும் சேமிப்புகளை வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளை ஒன்றுக்கு அதிகமாக வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகளையே இப்போது பார்க்கப்போகிறோம்.3

இலக்குகளுக்கு ஏற்ப கணக்கு..


நம் வாழ்வில் பல கனவுகள் இருக்கும், வோல்டு டூர், அமெரிக்காவில் மேற்படிப்பு, கார் அல்லது பைக் வாங்குவது, பெற்றோர் அல்லது மனைவிக்கு விலை உயர்ந்த கிப்ட் கொடுப்பது, குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள், திடீர் பணத் தேவை எனப் பல.

இப்படி இருக்கும் போது ஒரே ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருந்தால், சரியான முறையில் நிதி திட்டமிடுவது கடினம். ஒன்றுக்கும் அதிகமான வங்கி கணக்குகளை வைத்திருந்தால், நம் கனவுகளுக்கு (இலக்குகளுக்கு) ஏற்ப சேமிப்புச் செய்ய முடியும்.4

ஓரே ஒரு கணக்கு..


நீங்கள் பெறும் அனைத்து வருமானத்தையும் ஒரே கணக்கில் வைத்திருப்பதும் ஆபத்து தான். வருமான வரி, வங்கி ஆபத்துக் காரணிகள் எனப் பல வகையில் உங்கள் சேமிப்பிற்கு ஆபத்து இருக்கும்.

எனவே இத்தகைய பெரும் தொகையை நீங்கள் பல கணக்குகளில் வைத்துக்கொள்ளலாம். மேலும் DICGC நிறுவன கணக்கில் வைப்பு வைப்பதன் மூலம் நீங்கள் 1 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் பெறலாம்.5

பல வங்கிகளில் பல கணக்குகள்


பொதுவாக அரசு வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் வைப்புகளுக்கு அதிகமான வட்டி அளிக்கிறது. ஆனால் தனியார் வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது.

நீங்கள் தனியார் வங்கி சேமிப்புக் கணக்குகளில் அதிகளவிலான சேமிப்பை வைத்திருந்தால், பொதுத்துறை வங்கிகளில் மாற்றி அதிகளவிலான வட்டி வருமானத்தைப் பெறலாம்.6

ஏடிஎம் பயன்பாடு


தற்போது வங்கிகள் இலவச ஏடிஎம் பயன்பாடுகளை அதிகளவிலான குறைத்துள்ளதால், பல வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் நீங்கள் தொல்லை இல்லாமல் ஏடிஎம் சேவையைப் பயன்படுத்தலாம்.

7

இணையப் பரிமாற்றம்


பொதுத்துறை வங்கியின் இணையப் பரிமாற்றம் சேவைகள் கடினமாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளதால், தனியார் வங்கிகளின் மேம்பட்ட சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும்.

8

வட்டி வருமானத்திற்கு வரி


உங்கள் வங்கி கணக்கின் வைப்பு நிதியின் மீது வங்கிகள் சில சதவீத வட்டியை அளிக்கிறது. இத்தொகையின் அளவு ஒரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கு அதிகமான இருந்தால் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்.

பல வங்கி வைப்புக் கணக்குகளில் உங்களது சேமிப்பை பிரிப்பதன் மூலம் நீங்கள் வருமான வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம்.9

பாதுகாப்பு


பல கணக்குகளை வைத்திருப்பது எளிதான காரியம் தான், ஆனால் அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பாக உள்ளதா என்று மாதத்திற்கு ஒரு முறையாவது பார்த்துக்கொள்ள வேண்டும்.

10

மொபைல் சேவைகள்


தற்போது தனியார் வங்கிகள் முதல் பொதுத்துறை வங்கிகள் வரை அனைத்து வங்கிகளும் மொபைல் ஆப் மூலம் வங்கிச் சேவையை அளிக்கிறது. இதனைப் பயன்படுத்துவதற்கு முன் இதில் உள்ள சாதக மற்றும் பாதகங்களை ஆராய்ந்து பின்பு பயன்படுத்துங்கள்.

 
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-