அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஒரு நிமிடம் மனதை கலங்கடித்து விட்டது இந்த சம்பவமும் அதன் பின்னணியில் உள்ள தியாகங்களும் காயங்களும்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சிறுவர் சிறுமிர் இல்லம் முன்பு அனாதை இல்லம் என்ற பெயரில் இருந்து.


அப்படி நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்ககட்டத்தில் கணவனை இழந்த ஒரு பெண்மணி தன் மகளை நமது இல்லத்தில் சேர்ப்பதற்காக கொண்டு வருகிறார்.


அந்த பெண் வளாகத்தின் உள் நுழைந்து வரும் வேளையில் அந்த குழந்தை தன் தாயிடம் ஏதோ கேட்க அதை கேட்ட அந்த தாய் கதறி சப்தமிட்டு அழுது மயங்கி விழுகிறார்.


அந்த சப்தத்தைகேட்ட நமது நிர்வாகிகள் ஓடிப்போய் அந்த பெண்மணிக்கு முதலுதவி செய்து எழுப்புகின்றனர்.


எழுந்தவுடன் நமது நிர்வாகிகள் அந்த பெண்ணிடம் என்ன பிரச்சனை என்று கேட்க அந்த பெண்மணியோ நான் எனது குழந்தையை உங்களது இல்லத்தில் சேர்க்கமாட்டேன், அழைத்து செல்கிறேன் என்று கூறுகிறார்.


நமது சகோதரர்கள் என்ன பிரச்சனை என்று கேட்க அந்த பெண்மணியோ இல்லை இல்லை நான் சேர்க்கமாட்டேன் என்கிறார்.


நமது சகோரர்களும் வலுக்கட்டாயமாக என்ன பிரச்சனை என்று கேட்க அந்த பெண்மணி கூறிய வார்த்தை கேட்பவரின் கண்களில் கண்ணீர் வரச்செய்தது.
அந்த தாயிடம் அந்த குழந்தை கூறியிருக்கிறது அந்த அனாதை இல்லம் என்ற போர்டை பார்த்து விட்டு "அம்மா நான் அனாதையாமா?


எனக்கு அத்தா மட்டும்தான்மா இல்லை!இப்ப நீயும் என்னைய விட்டு போறியாமா? நான் அனாதையாமா? சொல்லும்மா நான் அனாதையாமா? " என்று கேட்க.


அதை கேட்க அந்த தாய் தாங்கமுடியாமல் கதறி மயங்கி விழுந்திருக்கிறார்.


இதை கேட்டு மனவேதனை அடைந்த நமது சகோதரர்கள் உடனே உயர்குழுவை கூட்டி முடிவு எடுத்தனர்.


இதை போன்றுஎத்தனை பிஞ்சு உள்ளங்ளை இந்த விஷயம் பாதித்திருக்கும் இனி மேல் அரசு


தரும் மானியமும் வேண்டாம் அனாதை இல்லம் என்கிற பேரும் வேண்டாம் என முடிவெடுத்தது.


அன்று முதல் அனாதை இல்லம் "அர் ரஹ்மான் சிறுவர் சிறுமியர் ஆதரவு இல்லம்" என பெயர் மாற்றப்பட்டு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.


அல்லாஹ்வின் உதவியைமட்டும் நம்பி இந்த ஜமாஅத் இந்த இறைபணியை செய்து கொண்டிருக்கிறது.


அனாதை இல்லம் என்று பெயரளவில் பேர் வைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் பணம் எதிர்பார்க்கும் கூட்டத்திற்கு மத்தியில் அந்த சிறுவர்,சிறுமியருக்கு நாம் அனாதை என்பது தெரியாக்கூடாது என்பதற்காக அரசாங்க மானியத்தையே வேண்டாம் என்று உதறிய இந்த ஜமாஅத்தில் நானும் ஒரு உறுப்பிராக இருப்பதில் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். -labir khan-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-