இண்டர்வியு செல்லுங்கள்.
தேர்வாகிவிட்டால் நிச்சயம் பாஸ்போர்ட் கேட்பார்கள்.
நீங்கள் கேட்கவேண்டியது...
OFFER LETTER OR AGREEMENT ORIGINAL DOCUMENT
கிடைக்கவேண்டும்.. இல்லைஎன்றால் ....??
நீங்கள் ஏமாற தயாராக இருக்கிறீர்கள்என்று பொருள்.
அடுத்து..
மெடிக்கல் டெஸ்ட்... பாஸ் ஆகி விட்டால் ரிப்போர்ட் கொடுங்கள்.
அட்வான்ஸ் கேட்பார்கள்.
கால் பங்கு தொகை மட்டும் கொடுங்கள்.
அடுத்து விசா காப்பி தருவார்கள். அல்லது கேட்கவேண்டும்
15 தினங்கள் மட்டுமே போதுமானது.
விசா காப்பி காட்டி மீதி பணம் கேட்பார்கள்
நீங்கள் சொல்லவேண்டியது.
காப்பி கொடுங்கள். முன் பணம் கொடுதாதாச்சு..
டிக்கெட் கேளுங்கள்..
டிக்கெட் காப்பி 10 தினங்களில் தருவார்கள்.
அப்படி தந்தால் மட்டுமே நீங்கள் முழு பணமும் தரவேண்டும்.
(கண்டிப்பாக உங்கள் முன்பணம், மற்றும் பின்னர் முழுத்தொகை அவர்கள் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்தவேண்டும். அதுவே உங்களுக்கு ஆதாரம்..இல்லை என்றால் உங்களுக்கு சேதாரம்...ம்ம்ம்)
அப்படி தந்தால் நீங்கள் பாக்கியசாலிகள் !!
--------------மேற்படி சொன்னதில் ஏதும் " ஏடா..கூடமாக" இருந்து பேச்சை மாற்றி மாற்றி அவர்கள் உங்களிடம் பேசினால்..
நீங்கள் தலையில் துண்டை போட்டுக்கொண்டு "தலைவிதியே" என்று தன் தவறை நினைத்து ...
இன்றைய அரசியல் வாதி போல பதவி கிடைக்காத சோகத்தில் தினமும் பிதற்றிக்கொண்டு...
"காதல்" பட கதாநாயகன் கிளைமாக்ஸ் பாணியில்..
"ங்கே..ங்கே.." என்று அலையவேண்டியதுதான் !!
ஜாக்கிரதை !! சொல்லிவிட்டேன்.. !! கேர்புல்..!!
நன்றி:அப்துல் சாலம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.