அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நோன்பின் மாண்பை உணருங்கள் !
நோய் நொடியின்றி வாழுங்கள் !
மாண்புடைய பிறை ரமலானில்
மகிழ்வே பூக்க வரும் நோன்பே !

கல்பின் தூசி கழுவிடலாம்
கவலை வென்று வாழ்ந்திடலாம்
சொல்வார் பெரியோர்நோன்பாளர்
சுவனச்சாவி உடையோ ராம் !

முப்பது நாளும் நோன்பேற்று
முறையாய் அவனைத் தினம் போற்றி
இப்புவி மீதில் எழிலாக
இன்பம் கண்டே வாழ்ந்திடுவீர் !

தனித்தி ருப்பவனைத் தனித்தி ருந்து
தயவாய் அவனின் தயைகேட்டு
பசித்தி ருந்தே ஆன்ம சுகம்
பலவாய் நாமே பெற்றிடவும்

விதித்த இறைவன் கட்டளையை
விரும்பி நாமே நோன்பேற்போம் !
குதித்தே வளங்கள் வாழ்வில் வரும் !
கொஞ்சி இறையருள் கூடிவரும் !   

  கவிஞர் மு ஹிதாயத்துல்லா -
இளையான்குடி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-