அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ராமநாதபுரம் : பேருந்து நிலையங்களை தூய்மையாக வைத்திருக்கவும் பயணச்சீட்டுகளை பேருந்தினுள்ளேயே எறிந்ந்து குப்பையாக்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயண சீட்டுகளை சேகரித்து தமிழக பெண் தஹ்மிதா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இராமநாதாபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த தஹ்மிதா பானு இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இவரது பெற்றோர் சீனி மீரான்-ஜுனைதா பேகம்.இவர் ஒரே வழித்தடத்தில் மட்டும் வழங்கப்பட்ட 1000 பேருந்து பயணச்சீட்டுகளை சேகரித்ததற்க்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியும் பயணச்சீட்டுகளை பேருந்தினுள்ளேயே கசக்கி எரிந்து பேருந்தை குப்பையாக மாற்றுவதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

தஹ்மிதா பானு கூறியதாவது: சுற்றுப்புற தூய்மையை காப்பதற்காக இந்த முயற்சியை செய்துள்ளேன்.எனக்கு உறுதுணையாக எப்பொழுதும் என்னுடன் இருக்கும் என் உயிர்த்தோழி மண்டபத்தை சேர்ந்த ஆ.கலைவாணி யை இவ்விடத்தில் குறிப்பிட கடைமை பட்டிருக்கிறேன். தஹ்மிதா பானு தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் B.A ஆங்கில இலக்கியமும், உச்சிப்புளியிள் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரியில் B.Ed பட்டமும், அண்ணாமலை பல்கலைக கழக தொலைநிலை கல்வியில் M.A ஆங்கிலம் பட்டம் பெற்றுள்ளார்.-    

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-