அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...








 இன்றைய நாட்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்கள் பெரும் தொல்லையாகவே பார்க்கப்படுகிறது. எமது தளத்திலும் தெரியாத இலக்கங்களில் இருந்து உங்களது போனிற்கு வரும் அழைப்புக்களை அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.



ஆகவே இன்றைய பதிவில் மற்றுமொரு முறை மூலம் உங்களது ஸ்மார்ட் போனிற்கு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.



இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை போட்டோவுடன் தெரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்படும் ஆன்ராயிடு செயலி ஒன்றின் மூலம் இந்த அனைத்து விடயங்களும் சாத்தியமாகின்றன.

இந்த செயலி எவ்வாறு தெரியாத இலக்கங்கள் யாருடையது என்பதை கண்டு பிடிக்கிறது என்று பார்ப்போம்.

இந்த செயலி பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிட்படுவதால் உங்களது போனிற்கு வரும் அழைப்புக்குரிய இலக்கம் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் கணக்கு ஒன்றில் இணைக்கப்பட்டு இருந்தால், குறித்த பேஸ்புக் கணக்கில் ப்ரோபைல் போட்டோவுடன் குறித்த இலக்கம் யாருடையது என்பதை பெயர் விபரங்களுடன் உங்களுக்கு காட்டுகிறது.

குறிப்பு

இந்த ஆன்ராயிடு சிறப்பு செயலி, உங்களது போனிற்கு வரும் அனைத்து தெரியாத இலக்கங்களையும் சரியாக காட்டாவிட்டாலும், 80%-இற்கும் அதிகமான இலக்கங்களை மிகச்சரியாக இனம் கண்டு கொள்கிறது.

இன்றைய காலகட்டத்தில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமக்கு வரும் தொல்லை அழைப்புக்களில் இருந்து விடுபட இந்த செயலி எமது ஸ்மார்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று தான்..



முதலாவதாக கீலே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொல்லுன்கள்.

அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, இதிலே போன் நம்பர் மற்றும் பெயர் விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் இந்த சேவையுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள்.







அவ்வளவு தான்.. இப்போது உங்களது Call Log ஸ்கேன் செய்யப்பட்டு அனைத்து தெரியாத இலக்கமும் யாருடையது என்பதை அவர்களது போட்டோ வுடன் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த அருமையான செயலி.





இவை தவிர, உங்களுக்கு தேவையில்லாத அழைப்புக்களை ப்லோக் செய்வது என்று இன்னும் பல பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த செயலி.

ஆனால் கவலையான விடயம் என்னவென்றால், இந்த செயலி இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கான கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்காது. ஆகவே இந்த செயலியை நாம் நேரடியாக தான் தரவிறக்கி கொள்ள வேண்டும். ஆகவே இந்த செயலியை எப்படி நேரடியாக தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்  


https://drive.google.com/file/d/0B0eJu6SRqhXBeW5XUHNmbnhTajA/view

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-