வரலாற்றுப் பெருமைக்கு வால்கொண்டா போரையும், சிலப்பதிகாரத் தொடர்புக்கு சிறுவாச்சூர் கோவிலையும், வேலைப் பாடுஅழகிற்கு வெங்கனூர் கோவிலையும், பௌத்த மதப் பரவலுக்குப் பரவாய் புத்த ரையும் பெருமைகளாய் பேசுகிற பெரம் பலூர் மாவட்டம், பௌதிகப் பழமைக்கு சாட்சியாகக் காட்டுவது சாத்தனூர் கல் மரத்தைத்தான்...!
இதைவிடப் பெரிதொன்று இந்தியாவில் இல்லையென்பதே இருமாப்புக்குக் கார ணம். வங்கக் கடலும் பெரம்பலூர் அருகே வாழ்ந்து சென்றதற்கு, வரலாற்று ஆதார மாய், இல்லையில்லை புவியியல் ஆதார மாய், பூக்காதவகைத் தாவரமாய் புதைந்து கிடந்ததைச் சொல்வதென்றால் காலத் தால் கரையாத கல்மரம்தான் இங்கு காட் சிப் பொருளாகவே உள்ளது.
12 கோடி ஆண்டுகளைக் கடந்து, படிமப் பாறையாகிக் கிடந்து, கண்டெடுக்கப்பட்ட கல்மரத்தின் வயது 76. கரையான்களால் கூட சுரண்டப் படாத கல்மரம், சுற்றுலாப் பயணிகளால் சுரண்டப்படுவதாக, காதலர் களால் களங்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. எழுப்பப் பட்ட குற்றச்சாட்டுக ளுக்குத் தீர்வாக ஏனோ, 76 ஆண்டுகளுக் குப்பிறகுதான், எழுப்பப்பட்டுள்ளது வேலி.
பச்சைமரத்தை வெட்டுவோரிடமிருந்து பட்டமரத்தை காத்துவிடலாம். மக்களிடம் தப்பியது, மழைக்கும் வெயிலுக்கும் தப்பி னால்தான், சாத்தனூர் கல்மரமாய் இருந் தாலும் சாகா வரத்தைப் பெறமுடியும்...!
Thanks: -WILSON J PERAMBALUR
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.