அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

நூஹ் நபி (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று குர்ஆன் கூறுகிறது. முந்தைய சமுதாயத்தினரின் வாழ்நாள் காலம் மிக நீண்டதாக இருந்ததால் அவர்கள் அதிகமதிகம் வழிபாடுகள் புரியவும் நற்செயல்களில் ஈடுபடவும் நல்ல வாய்ப்பு இருந்திருக்கிறது.

ஆனால் இறுதி இறைத்தூதருடைய சமுதாயத்தினரின் சராசரி வாழ்நாள் 60 முதல் 70 ஆண்டுகள்தான். இவ்வளவு குறுகிய காலத்தில் முந்தைய சமுதாயத்தினரைப் போல் எப்படி வழிபாடுகளில் ஈடுபட்டு நன்மைகளைப் பெறுவது என்னும் கவலை நமக்கு ஏற்படலாம்.
இந்தக் கவலையைப் போக்குவதற்கு இறைவன் அருளிய அருட்கொடைதான் லைலத்துல் கத்ர் எனும் மாட்சிமை மிக்க இரவு.

இந்த லைலத்துல் கத்ர் ரமலானின் இறுதிப் பத்தில் ஒற்றைப் படை இரவுகளில்( 21, 23, 25, 27, 29) இருக்கிறது என்று நபிகளார் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.
இந்த இரவு ஆயிரம் மாதங்களுக்குச் சமம் என்கிறது குர்ஆன்.
சரி, ஒரு சின்ன கணக்கு போட்டுப் பார்ப்போம்.
ஒரு மனிதர் இந்த உலகில் 65 ஆண்டுகள் வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அதில், முதல் 15 ஆண்டுகளை அறியாப் பருவம் என்று ஒதுக்கிவிடுவோம்.
மீதியுள்ள 50 ஆண்டுகளும் அவர் முறையாக ரமலான் நோன்பு நோற்று, வழிபாடுகளில் ஈடுபட்டு, குறிப்பாக இறுதிப் பத்து நாள்களில் ஒற்றைப் படை இரவுகளில் விழித்திருந்து வணங்கினார் எனில் அவருக்கு 50 லைலத்துல் கத்ர் இரவுகள் கிடைத்துவிடுகின்றன.

ஒரு லைலத்துல் கத்ர் என்பது 1000 மாதங்களுக்குச் சமம்.அதாவது கிட்டத்தட்ட 83 ஆண்டுகள்.
அப்படியானால் 50 லைலத்துல் கத்ர் இரவுகளுக்கு: 50X 83= 4150 ஆண்டுகள்.
அதாவது, 4150 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து தொடர்ந்து வழிபாடுகளில் ஈடுபட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்குமோ அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.

நூஹ் நபியின் சமுதாயத்தினருக்குக் கிடைத்தது வெறும் 950 ஆண்டுகள்தான்.
இப்போது சொல்லுங்கள்- ரமலானின் இறுதிப் பத்தை, குறிப்பாக ஒற்றைப் படை இரவுகளை


-சிராஜுல்ஹஸன்
☔🌴☔🌴☔🌴☔🌴☔

புனித றமழானின் இறுதிப் 10 நாட்களில், அதிகமான நன்மைகளை அடைந்துகொள்ள மிக இலேசான முறை ஒன்றை, மக்கா இமாம் சேய்க் மாஹிர் அவர்கள் கூறுகிறார்கள்:
1. இறுதிப்பத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு தீனார்  / ஒரு திர்கம்!(குறிப்பிட்ட சிறு தொகைப் பணம்) தர்மம் செய்து வந்தால், இதில் ஒரு நாள் கொடுத்த தர்மம், நிச்சயமாக லைலதுல் கத்ர் இல் கொடுபட்டிருக்கும்! அப்போது, அது ஒவ்வொரு நாளும் 84 வருடங்கள் தொடர்ந்து தர்மம் செய்த நன்மைகளை அள்ளித்தந்துவிடும்!

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

2. இதேபோல், ஒவ்வொரு இரவும், (நள்ளிரவுக்குப் பின் கியாமுல் லைல்) இரண்டு ரகஅத்துகள் தொளுது வந்தால், லைலத்துல் கத்ர் இரவில் தொழுதது, 84 வருடங்களாக தொடர்ந்து தினமும் தொழுதுவந்த நன்மை கிடைக்கும்!

✨✨✨✨✨✨✨✨✨

3. மேலும், இதேபோல், ஒவ்வொரு இரவும், சூரத்துல் இஃக்லாசை, 3 முறை ஓதி வந்தால், லைலத்துல் கத்ர் இரவில் ஓதியது, 84 வருடங்களாக தொடர்ந்து தினமும் முழுக் குர்ஆனையும் ஓதிவந்த நன்மையைத் தரும்!

⛈⛈⛈⛈⛈⛈⛈⛈

4. இந்தச்செய்தியை பரப்புவதும், அல்லாஹ் நாடினால், பெரும் நன்மைகளை அள்ளித்தரும்!

🌟🌟🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟 இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்...
யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக அமையலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-