அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி துபாய்.


தமிழர்களை நிர்வாகிகளாக கொண்டு செயல்படும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்ட்ர் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ பார‌ம்பரிய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் பள்ளி வளாகத்திலும் அதன் அருகில் உள்ள இடங்களிலும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.


தின‌மும் 5000 க்கும் மேற்ப‌ட்டோர் இந்த‌ இஃப்தார் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நோன்பு துற‌ப்பு நிக‌ழ்வில் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர். இதில் நோன்புக் க‌ஞ்சியுட‌ன், ச‌மோசா, வ‌டை, ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர், பேரித்த‌ம் ப‌ழ‌ம் உள்ளிட்ட‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.


சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடைபெற்று வருகிறது.


இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் பொது செயலாளர் லியாக்கத் அலி வழிகாட்டுதலுடன் ஈமான் அமைப்பின் துணை பொது செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் செயலாளர்கள் கீழை ஹமீது யாசின் ,சாதிக், அப்துல் ரசாக் , துணை செயலாளர் முஹைதீன் , நிர்வாகிகள் ஷமீம், யாகூப்,காதர், ,உஸ்மான் அலி, அபுதாஹிர் மற்றும் லப்பைக்குடிகாடு படேஷா பசீர் ,வி.களத்தூர் H.ஷர்பு தீன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-