அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


எனது பெயர் ரமேஷ் குமார் நான் முஸ்லிம்கள் அதிகமாக வாலும் ஓர் அழகிய கிராமத்தில்தான் வாழ்ந்து வருகின்றேன்.

அக் கிராமத்தில் உள்ள பெரிய பள்ளி வாயலுக்கு முன்னால்தான் எனது வீடு அங்கே எப்போதும் நடைபெருகின்ற பயான் நிகழ்வுகளையும், குர் ஆன், ஹதீஸ் போதனைகளைம் நான் பிறந்ததில் இருந்து கேட்டு வருகின்றேன். ஆம் எனது பிறப்பே அந்த முஸ்லிம் கிராமத்தில்தான்.  

எனது நண்பர்கள் அனைவருமே முஸ்லிம் இளைஞர்கள்தான் எனவே ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவு இஸ்லாம் தெரியுமோ அதே அளவு எனக்கும் இஸ்லாம் தெரியும் என கூறினால் மிகையாகாது.  நான் இஸ்லாத்தை ஏற்று கொள்ளுவது என்பது எனது என்னம் இல்லை இஸ்லாத்தை எதிர்க்காமல் வாழ்தாலே போதும் என்பது எனது ஆசை.

ஏன் என்றால் அந்த அளவு நேர்மையான மார்க்கம் இஸ்லாம்.  

நான் தற்போது விஷயத்திற்கு வருகின்றேன் 03/06/2016.  அதாவது  இன்று வெள்ளி கிழமை ஜும்ஆ குத்பாவை வீட்டில் இருந்து கேட்டு கொண்டிருந்தேன்.

நோன்பு குர் ஆனின் மாதம் என்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றும் ஆழமான கருத்துக்களை கொண்ட அந்த அறிவுரை இனிதே முடிவுற்றது. தொழுகையும் முடிந்தது.
நான் உறங்கலாம் என்று கன்னயர்ந்து  எனது கண்ணை முட எத்தனிக்கின்றேன் பள்ளியில் இருந்து பெரும் சத்தம் ஒன்று எனது காதை பிளந்தது.

ஓடோடி அந்த இடத்திற்கு நான் விரைந்தேன் அங்கே பெரும் கை கலப்பே நடை பெற்று கொண்டிருந்தது பள்ளியினில் தூசன வார்தைகள் அவ்விடத்தையே அசிங்க படுத்தியது. ஆம் நோன்பு வந்தால் அக் கிராமத்தில் முஸ்லிம்கள் அடித்து கொள்ளுவதும் பெரு நாள் அன்று ஒருவறையொருவர் பகைத்து கொண்டு சண்டையிடுவதும் எனக்கோன்றும் புதியதில்லை பார்த்து பலகிபோன சங்கதிதான்.    

ஆனால் இன்று சண்டையின் காரணம் சற்று வித்தியாசமாக அமைய பெற்றது. வளமையாக கருத்து முரண்பாடுகளுக்கு அடித்து கொள்பவர்கள் இன்று இயக்கங்களுக்காக அடித்து கொண்டார்கள்.  
       
இஸ்லாம் ஒரே மார்க்கம் என்பதை நானும் கற்றுள்ளேன் ,அதில் பிரிவினை கூடாது முஸ்லிம்கள் ஒன்றுமையாக வாழ வேண்டும் என்பது நபியவர்களின் போதனை என்பதயும் நான் அறிவேன்.    ஆனால் இன்று நபியவரின் கூற்றுக்கு மாறாக முஸ்லிம்கள் பல இயக்கங்களாகவும் கொள்கைகளாகவும் பிரிந்து சின்னா பின்னமாக காண படுகிண்றார்கள்.

இன்று முஸ்லிம்களிடத்தில் இயக்கம் என்பது ஒரு வெறியாக மாறி வருவதை நான் கண் கூடாக கண்டு வருகின்றேன். உதரணமாக இந்து மதத்தில் ஜாதி வெறி எவ்வாறு தலை விரித்தாடுகின்றதோ அதே போல் முஸ்லிம்களிடத்தில் இயக்க வெறி தலைவிறித்தாடுகின்றது.              

இந்து மதத்தில் மேல் ஜாதிகாரன் கீழ் ஜாதிகாரர்களின் கோவிலுக்கு செல்லமாட்டார்கள் கீழ் ஜாதிகாரர்கள் மேல் ஜாதிகாரர்களின் கோவிலுக்கு செல்லமாட்டார்கள்.

இதே போன்றுதான் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் அவர்களின் நிலைபாடு.

இதே போன்றுஇன்று முஸ்லிம்களும் ஒரு இயக்கவாதி இன்னுமோரு இயக்கவாதியின் பள்ளிக்கு செல்லுவதில்லை அடுத்த இயக்கவாதியின் நல்லது கேட்டது என்று எதிலும் கலந்து கொள்ளுவதில்லை,                            

ஏன்  திறுமண உறவுக்காக மணமகன் Or மணமகள் கொடுப்பதேன்றாலே எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என விசாரணை செய்கிறார்கள். தனது இயக்கம் அல்லாத வேரு இயக்கத்தை சார்ந்தவர்களை ஒரு எதிரியாக பார்கின்றார்கள்.    

அது மட்டுமா என்னிடம்  இஸ்லாத்திற்கு வாருங்கள் என அழைத்தது  இல்லை எமது கொள்கைக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கின்றார்கள் மொளவிமார்கள் உட்பட ,

சுருக்கமாக கூற போனால் இன்று இஸ்லாத்தின் மீது வைத்துல்ல பற்றைவிட அவர்களின் இயக்கங்கள் மீதுதான் பற்று அதிகம்.

இஸ்லாத்தை வளர்ப்பதை விட தமது இயக்கங்களை வளர்பதிலேயே குறியாக உள்ளார்கள். நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லுவதை விட நான் இந்த இயக்கத்தை சார்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.

எனது முஸ்லிம் நண்பர்கள் உட்பட எனக்கு தெரிந்த அனைத்து மொளவிமார்களிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.  அவை பின் வருமாரு ,

முஸ்லிம்கள் இவ்வாறு இயக்கங்களா பிரிந்து செயற்படுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுன்டா ?  

அதற்கு அனைவரும் கூறிய பதில்.  நீ முஸ்லிம்களை பார்க்காதே இஸ்லாத்தை பார்.

அன்பின் நண்பர்களே நான் இஸ்லாத்தை பார்த்ததால் தான் கூறுகின்றேன் இன்று முஸ்லிம் என்ற பெயர் தாங்கிகள்தான் அதிகம் உண்மையான முஸ்லிம்கள் மிக அரிது.

இஸ்லாத்தில் இயக்கங்களாக பிரிவதற்கு ஓர் இடத்திலும் அனுமதியில்லை இஸ்லாம் மார்க்கம் ஒன்றே !  இதுவே எனது பதில்.      

 இன்றைய முஸ்லிம்கள் சொல்லில் வீரர்கள் செயலில் கோலைகள்.      நன்றி.

🔴⚫என்னை பதில் சொல்ல. ? தெரியவில்லை எனக்கு  நீங்களே பதில் கூறுங்கள்.

🔴⚫ஆனால் அமைதியான முறையில் ,

🔴⚫ வாட்ஸ் அப் குரூப்பில் வந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-