அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழக பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கடந்த ஓராண்டாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.

மத்திய அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கியர் போன்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடியாகவும், 9 முதல் 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர்.

கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. மாணவர்கள் உதவித்தொகைக்காக கலெக்டர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்ற ஆண்டுக்கான உதவித்தொகை இதுவரை வரவில்லை. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களிடமும் வங்கி சேமிப்பு கணக்கு பெறப்பட்டுள்ளது. நிதி வரப்பெற்றதும் மாணவர்களின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும், என்றார்.

நன்றி:கல்விமலர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-