அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது உயரமான, அழகான கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்கள் தான். அதிலும் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பனை மரம் (Palm Jumeirah) போன்ற தீவுகள் அருமை.

இந்த வகையில் துபாய் நாட்டின் 75 சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி தளத்தை இந்நாடு அமைக்க உள்ளது.

1

கான்சென்டிரேடட் சோலார் பவர் (CPS)


அடுத்த 5 வருடத்தில் துபாய் நாட்டில் மிகப்பெரிய பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்தக் கான்சென்டிரேடட் சோலர் பவர் திட்டம் தான் உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி தளமாக இருக்கப் போகிறது.

2/

1,000 மெகாவாட் மின்சாரம்


CPS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கான்சென்டிரேடட் சோலார் பவர் திட்டம் ஏற்கனவே உலகில் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்தாலும், மிகப்பெரிய அளவில் யாரும் முயற்சி செய்யவில்லை.

துபாய் மண்ணில் அமைக்கப்படும் இந்தச் சிபிஎஸ், 2030ஆம் வருடத்திற்குள் சுமார் 1,000 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன் வாய்ந்தது.3

75 சதவீத மின்சாரத் தேவை


CPS திட்டத்தின் வாயிலாக 2050ஆம் ஆண்டுக்குள் இந்நாட்டின் 75 சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கு இத்திட்டத்தை வகுக்கப்பட்டுள்ளது.

4

ஹூலியோஸ்டாட்ஸ்


மேலும் கான்சென்டிரேடட் சோலார் பவர் திட்டத்தில் சோலார் பேனல்களை heliostats முறையில் அதாவது வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் வட்டத்தின் நடுவில் இருக்கும் சேமிப்பு மற்றும் பரிமாற்ற தளத்திற்கு வரும்.

5

மொரோக்கோ


இதேபோன்ற ஹூலியோஸ்டாஸ் திட்டம் மொரோக்கோ நாட்டில் உள்ளது, ஆனால் அது வெறும் 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது.

6

பூர்ஜ் கலிபா


துபாய் மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியம் (DEWA) பூர்ஜ் கலிபா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கை கூட்டத்தில் DEWA அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான Saeed Mohammad Al Tayer இத்திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

7

மலிவான மின்சாரம்


CPS மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகவும் மலிவானதாக இருக்கும் எனவும் சையத் முகமத் தெரிவித்தார். தற்போதைய கணிப்புகளின் படி ஒரு கிலோவாட் மின்சாரம் 8 அமெரிக்கச் செண்டுகளாக இருக்கும் எனக் கூறினார்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-