அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்தியா போன்ற பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளை கொண்ட நாட்டில், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியாது என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ பிரிக்கப்படாத இந்து குடும்ப சட்டத்தின் கீழ் பெறும் வரிச்சலுகையை விட்டுக்கொடுக்க சங்க் பரிவார் தயாராக இருக்கிறதா? நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் 16 வழிகாட்டுதல் கொள்கைகள் உள்ளன. அதில் ஒன்று முழு மதுவிலக்கு பற்றி கூறுகிறது. நாம் ஏன், நாடு முழுவதும் மது விலக்கு அமல்படுத்து பற்றி பேசவில்லை?இதுவும் வழிகாட்டுதல் கொள்கையாகத்தான் வகுக்கப்பட்டிருக்கிறது.
குடிகார கணவர்களால் பல பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிறார்கள். சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அமைகிறது. பிறகு ஏன்? இந்தியாவில் முழு விலக்கு அமல்படுத்தக்கூடாது?. சட்டப்பிரிவு 371 நாகாலாந்தியர்களுக்கும் மிசோரம் மக்களுக்கு சிறப்பு விதிகளை வழங்குகிறது. அதை நீங்கள் பறிக்க போகிறீர்களா? கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் இவை.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை வேறுபாடுகள் நிறைந்த நாட்டில், பொதுவான சிவில் சட்டத்தை நீங்கள் கொண்டுவர முடியாது. இதுதான் இந்தியாவின் பலம் ஆகும். நமது நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில், இந்த நாடுதான் மதத்தைகொண்டாடுகிறது. நீங்கள் ஒரே பொதுவான சிவில் சட்டத்தை கொண்டிருக்க முடியாது. எனவே இந்தியாவில் இது சாத்தியம் இல்லாத மற்றொன்றாகும்” என்றார்.
நன்றி: தினத்தந்தி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-