அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்பு.

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

உமர் (ரழி) அவர்கள் தனது விதவை மகளான ஹஃப்ஸா (ரழி) அவர்களை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உஸ்மான் (ரழி)  ஆகியோரிடத்தில் கேட்டுக்கொண்டபோது அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணியது, அவர்கள் ரகசியம் பேணுவதில் எத்தகு சிறப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கான வரலாற்று சான்றை பாருங்கள்.

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஸஃப்ஸா விதவையான போது (அவர்களை வேறொருவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள், (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது (யோசித்த பின் எனது முடிவைக் கூறுகிறேன்) என்று சொன்னார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்த போது) அவர் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள்.

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

ஆகவே, நான் அபூபக்ர் அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே நான் மிகவும் மன வருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன்.

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

பிறகு (ஒரு நாள்) அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது, நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மன வருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான், ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் -ரலி) அவர்கள் நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருதிருப்பேன் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4005. அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳

ஜஸாக்கல்லாஹ்கைரன்!!!!

வலையுகம் ஹைதர் அலி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-