அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானம் அளித்த பீதியையடுத்து துபாய் விமான நிலைய வான்எல்லை அவசரமாக மூடப்பட்டது.


துபாய்:

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானம் அளித்த பீதியையடுத்து துபாய் விமான நிலைய வான்எல்லை அவசரமாக மூடப்பட்டது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியில் நேற்று காலை திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானம் அளித்த பீதியையடுத்து துபாய் விமான நிலைய வான்எல்லை அவசரமாக மூடப்பட்டது.

காலை 11.36 மணியில் இருந்து 12.45 மணிவரை அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லவோ, தரையிறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் 22 விமானங்கள் துபாய் சென்ட்ரல் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இதன் விளைவாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்காக வழக்கம் தெரிவித்து கொள்வதாகவும் துபாய் விமான நிலைய தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இதுபோன்ற ஆளில்லா விமான்ங்களை பறக்க விடுவது சட்டபுறம்பான செயல் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-