அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

இன்று ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள நிலை, ஈரான் மற்றும் அரபுக்கள் என்ற இரு பிரதான பாத்திரங்களுக்கும் இடையில் தசாப்தங்களாக நீடித்து வரும் நெருக்கடியின் விளைவாகும்.


1979 ஈரானிய புரட்சி, பிராந்தியத்தில் புரட்சியை பரப்புவதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், 8 வருடங்கள் நீடித்த ஈரான்-ஈராக் யுத்தம் ஆகியவற்றுடன் இந்த நெருக்கடி ஆரம்பித்தது. சர்வதேச தலையீட்டை தூண்டிய, குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போதான 2 வருடங்களில் மாத்திரமே நெருக்கடி அமைதி கண்டிருந்தது.


2003 இல் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு, அல்காஇதாவையும், ஐ.எஸ்ஸையும் உருவாக்கியது. பிராந்திய சக்திகள், உடன்படிக்கைள் மூலம் அரசியல் அல்லது இராணுவ ரீதியான சமப்படுத்தல்களை ஏற்படுத்தாத வரை, இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும்.


ஈராக், வளைகுடா, சிரியா, பலஸ்தீன் ஆகியவற்றில் போராட்டங்கள் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என்ற ஈரானின் ஆவலுக்குப் பின்னாலுள்ள தர்க்கத்தையும் தூண்டற் காரணிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


ஈரானின் மேற்கு எல்லை மிகவும் குறுகியதாக இருப்பதால், அதை விஸ்தரிக்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது. இருப்பினும், இந்த எல்லையில் உள்ள நாடுகள் எண்ணெய் வள நாடுகள் என்பதால், மேற்கு இதை ஏற்றுக் கொள்ளாது என்பதை ஈரான் புரிந்து வைத்துள்ளது.


எனவேதான்,பல்வேறு வித்தியாசமான வழிகள் மூலம் தாக்கம் செலுத்துவதற்கு ஈரான் முயற்சித்திருந்தது. இருப்பினும், அது அண்மைக்காலம் வரை சாத்தியமாகவில்லை. மேற்கு மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து தீவிரவாத்துக்கு எதிரான கொடியின் கீழ் திரண்டுள்ள ஈரானுக்கு, ஐ.எஸ். சேவை செய்கிறது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.


ஈராக் ஈரானின் மேற்கு வாயலில் இருப்பதால், அது ஈரானுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. ஈரானுக்கு ஈராக்கை மறைமுகமாகவே கட்டுப்படுத்த முடியும். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவுவதன் மூலம் ஈராக்கில் ஒரு பயன்மிகு பங்காளியாக இருப்பதாகக் கூறி, வொஷிங்கடனை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யு+. புஷ்ஷின் நிர்வாகத்தின்போது, ஈரான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஒருவேளை ஜோர்தானை தவிர்த்து, அப்போது வொஷிங்டனுடன் ஒத்துழைத்த ஒரே நாடு ஈரான் தான்.


அதேவேளை, ஈராக்கின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கு ஈரான் பல்வேறு வழிகளைக் கையாண்டது. தெஹ்ரான் அதன் கூட்டாளியான சிரிய அரசுடன் இணைந்து, அல்காஈதா மற்றும் ஈராக்கின் ஆயுதம் தரித்த எதிர்தரப்புக்களை சிரியாவிலிருந்து ஈராக்கில் பதுக்கச் செய்து, பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலையை நாசமாக்குவதற்கும், அமெரிக்க துருப்புக்களுக்கு நஷ்டங்களை விளைவிப்பதற்கும் செயற்பட்டது.


பராக் ஒபாமா ஜனாதிபதியாகியதும், அவர் அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் வாபஸ் வாங்கியதோடு, ஆயுதக் குழுக்கள் மீளெழுந்து வரும் காலத்தில், ஈரான் ஈராக்கினுள் நுழைவதற்கான வழிகள் உருவாகின.


ஐ.எஸ்ஸிடமிருந்து ஈரானைப் பாதுகாகத்தல் என்ற போர்வையில் தற்போது ஈரான் ஈராக்கில் செயற்படுகிறது. தெஹ்ரான் சில ஷீஆ குழுக்களை வேறு சிலவற்கு எதிராக ஆதரிக்கின்றது. ஈராக்கின் மத்திய அரசை பலவீனப்படுத்துவதற்காக, Pழிரடயச ஆழடிடைணையவழைn ருnவைள (Pஆரு) என்ற இராணுவக் குழுவை உருவாக்கியதன் பின்னணியில் தெஹ்ரானே உள்ளது.


ஐ.எஸ். உருவாக்கத்தில் ஈரான் மிக முக்கியமான ஒரு சூத்திரதாரி என்று நான் நம்புகிறேன். ஆனால், அதை நிறுவுவது கடினமாக உள்ளது. எவ்வாறாயினும், ஐ.எஸ். மூலம் நன்மையடைகின்ற ஒரே தரப்பு ஈரான்தான். ஏனெனில், ஐ.எஸ்ஸைக் காட்டித்தான் ஈரான் ஈராக்கில் நுழைந்தது.


ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையணி இல்லாவிடின், ஈரான் வீழ்ந்திருக்கும் என்று தெஹ்ரான் பீற்றிக் கொள்கின்றது. ஐ.எஸ். என்பது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பின்போது தலைதூக்கிய அல்காஈதான் மீள்வருகையாகும். அப்போது, ஈரான் சார்பு குழுக்கள் பக்தாத் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், அரசியல் திட்டத்தை நாசமாக்கும் பணியில் அல்காஈதா வெற்றி பெற்றிருந்தது.


சிலர் சவூதிக்கும் ஈராக்கிய மக்களின் வித்தியாசமான கூறுகளுக்கும் மத்தியில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என்று ஈராக்குக்கான சவூதி தூதுவர் தாமிர் அல்ஸபான் அண்மையில் தெரிவித்துள்ளார். இவர் இங்கு ஈரானையே நாடியுள்ளார்.


ஈராக்கில் நடைபெறும் சவூதி-ஈரானிய போராட்டம் குறித்த உத்தியோகபூர்வ கருத்தொன்று வெளிவரும் முதற் சந்தர்ப்பம் இதுவே. தெஹ்ரான் ஈராக்கின் மீதும் அதன் செல்வங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றது. ஆனால், சவூதி அரேபியா அதன் எல்லைகளைப் பாதுகாக்கவும், ஈரானின் விரிவாக்கத்தைத் தடுக்கவுமே விரும்புகின்றது.


அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பையும், ஈராக்கில் புதிய அரசு உருவாக்கப்படுவதையும் சவூதி அரேபியா புறக்கணித்ததால், ஈராக்கில் சவூதி அரேபியாவின் பிரசன்னம் சில வருடங்களுக்கு தாமதித்தது. எவ்வாறாயினும், தெஹ்ரான் அமெரிக்கர்களுடன் ஒத்துழைத்து, பதிலுக்கு தற்போதுள்ள செல்வாக்கைப் பெற்றுக் கொண்டது.


சவூதி அரேபியாவின் ஆர்வம் ஈராக் மக்களோடு ஒத்துப்போகின்றது. வெளிநாட்டு ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்று தமது நீர் மற்றும் எண்ணெய் வளங்களை தாமே கட்டுப்படுத்தும் நிலையையே ஈராக்கியர் விரும்புகின்றனர்.


சவூதி அரேபியா அல்லது ஏனைய வளைகுடா நாடுகள் பணக்கார நாடுகள் என்பதால், அவற்றுக்கு ஈராக்கை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை. சத்தாம் ஹுஸைனின் அரசை ஒத்திருக்காத அரசையும், ஈரானின் கைபொம்மையாக இல்லாத அரசையுமே அவை விரும்புகின்றன.


ஐ.எஸ். மற்றும் அல்காஈதா ஆகியன ஈராக், சிரியா, யெமன் போன்ற நாடுகளில் பரவுவது முதலில் தம்மை பாதிப்பதாகவும், ஈரான் போன்ற நாடுகள் இந்த தீவிரவாத குழுக்கள் மூலம் பயன் பெறுவதாகவும், பிராந்திய சக்திகளை பலவீனப்படுத்துவதற்கும், அவற்றின் விவகாரங்களில் தலையிடுவதற்கும் இந்த தீவிரவாத குழுக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் வளைகுடா நாடுகள் தற்போது உணர்ந்திருக்கின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-